Aran Sei

இலங்கை அரசின் போர்க்குற்றம் குறித்த தீர்மானத்தைப் பயமின்றி எதிர்கொள்வோம் – கோத்தபாய ராஜபக்சே

திகாரப்பகிர்வு என்றபோர்வையில் பிரிவினைவாதத்தை மற்ற நாடுகள் ஊக்குவிப்பதை இலங்கை அரசு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்று அந்நாட்டின் பிரதமர் கோத்தபாய ராஜபக்சே தெரிவித்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கை மனித உரிமை மீறல்கள் – ஹார்வர்ட் சட்டக் கல்லூரி மாணவர் ஒருங்கிணைப்பில் ஐநாவுக்கு கடிதம்

இலங்கையின் தெற்கு மட்டாரா பகுதியில் நடந்த கிராமப்புற மக்களுடனான கலந்துரையாடல் நிகழ்வில் இவ்வாறு ராஜபக்சே தெரிவித்துள்ளாரென அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐநா மனித உரிமைகள் சபை – இலங்கை மீதான தீர்மானத்தின் மீது இன்று வாக்கெடுப்பு – இந்தியாவின் நிலைப்பாடு என்ன?

சர்வதேச மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கை அரசின் மீதான போர்குற்றத்தை விசாரிக்கவும், இலங்கை அரசில் அதிகாரப்பகிர்வை நடைமுறைப்படுத்தும் 13 வது சட்டதிருத்தத்தை முறையாக அமல்படுத்துவது குறித்தான தீர்மானம்  22 நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.

‘இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பரிந்துரையுங்கள்’ – யாழ்ப்பாணத்தில் தொடங்கிய உண்ணாவிரதம்

இலங்கையில் நடந்த உள்நாட்டு போரின்போது நடந்த இலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் குறித்தும், இஸ்லாமியர்கள் மற்றும் தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வளிக்கும் 13 வது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவம் இந்தத் தீர்மானத்தின் நோக்கமாகும்

இந்நிலையில் இந்த மசோதா குறித்து தெரிவித்த கோத்தபாய ராஜபக்சே, “ஜெனீவாவின் இந்த முடிவை இலங்கை பயமின்றி எதிர்கொள்ளும், நாங்கள் சுதந்திரமான நாடு, நாங்கள் குற்றவாளிகள் இல்லை” என்று தெரிவித்துள்ளதாகவும் தி இந்து செய்தியில் கூறப்பட்டுள்ளது.

மக்கள் எழுச்சிப் போராட்ட அறிக்கை – வடகிழக்கு தமிழர், முஸ்லீம்கள், மலையக தமிழர் உரிமைகள் வலியுறுத்தல்

இந்த மசோதாவின் மீதான வாக்கெடுப்பின்போது இந்திய அரசு புறக்கணித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்