Aran Sei

‘ஜாலியன்வாலா பாக் புதுப்பிக்கப்பட்ட செலவு குறித்து வெள்ளை அறிக்கை வேண்டும்’ – பாஜக மூத்த தலைவர் கோரிக்கை

ஜாலியன்வாலா பாக் புதுப்பிக்கப்பட்டது குறித்து ஒன்றிய அரசு  வெள்ளை அறிக்கைத் தாக்கல் செய்ய வேண்டுமென பாஜகவின் மூத்த தலைவரும்,  பஞ்சாப் மாநில முன்னாள் சுகாதாரத்துறை  அமைச்சருமான லட்சுமி கன்தா சாவால் கோரியுள்ளார்.

மேலும், ஜாலியன்வாலா பாக் மீண்டும் முன்னர் இருந்தவாறே கட்டப்பட  வேண்டுமெனவும் பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

இதுகுறித்து தெரிவித்துள்ள அவர், “குறுகிய பாதை செல்பி படம் எடுக்கும் இடமாக மாறியுள்ளது. ஷஹீடி க்ஹு கண்ணாடி பெட்டிப் போன்று மாறியுள்ளது. தியாகிகளின் படங்கள் காட்சிக் கூடத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது. என்னைப் போன்ற பழைய ஜாலியன்வாலா பாக்கை பார்த்தவர்களுக்கு இது வலிமிகுந்ததாக உள்ளது”. என்றும் தெரிவித்துள்ளார்.

எனவே, புதுப்பிக்கப்பட்ட  ஜாலியன்வாலா பாக் மீண்டும் பழைய மாதிரியே கட்டப்பட வேண்டுமெனவும், ஜாலியன்வாலா பாக் புதுப்பிக்கப்பட செலவு செய்யப்பட்ட 20 கோடி குறித்து வெள்ளை அறிக்கைத் தாக்கல் செய்யப்படவேண்டும் என்றும்  லட்சுமி கன்தா சாவால் கூறியுள்ளார்.

SOURCE:THE INDIAN EXPRESS 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்