தமிழகத்தில் ’தடுப்பூசி திருவிழா’ நடைபெற்று வருவதால், தடுப்பூசி பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க 20 லட்சம் தடுப்பூசிகள் வழங்க வேண்டும் என மத்திய அரசுக்குத் தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.
கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருவதால் தமிழகத்தில் கடந்த ஆண்டைவிட அதிகமானோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டில் நாளொன்றுக்கு அதிகபட்சமாக 6,993 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், கடந்த இரு தினங்களாக நாளொன்றுக்கு 8 ஆயிரம் பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
ஏப்ரல் 8 ஆம் தேதி மாநில முதலமைச்சர்களுடன் காணொளி காட்சி வாயிலாக பேசிய பிரதமர் மோடி, 45 வயதுக்கும் மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் விதமாக ஏப்ரல் 14 முதல் 16 ஆம் தேதிவரை ’தடுப்பூசி திருவிழா’ நடத்துமாறு அறிவுறுத்தினார்.
அதன்படி கடந்த 2 தினங்களில் 1.25 லட்சம் பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதை நாள் ஒன்றுக்கு 2 லட்சமாக உயர்த்தவும், தடுப்பூசி செலுத்துக் கொள்ளாத 45 வயதுக்கும் குறைவானவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தமிழக சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில் மருத்துவக்கல்லூரிகள், மினி கிளினிக்குகள், தனியார் மருத்துவமனைகள் என 4,328 மையங்களில் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
’தடுப்பூசி, ஆக்சிஜன், படுக்கை வசதி இல்லை; பி.எம். கேர்ஸ் எங்கே?’ – ராகுல்காந்தி கேள்வி
தடுப்புசி செலுத்த துவங்கிய ஜனவரி 16 ஆம் தேதியில் இருந்து தற்போது வரை 1.39 கோடி பேருக்குச் செலுத்த வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஏப்ரல் 14 ஆம் தேதிவரை தமிழகத்திற்கு 54.85 லட்சம் டோஸ்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதில் 42 லட்சம் டோஸ்கள் பயன்படுத்தப்பட்டு விட்டது.இந்நிலையில், நாளொன்றுக்கு 2 லட்சம் தடுப்பூசிகள் செலுத்த தமிழக சுகாதாரத்துறை முடிவு செய்திருப்பதால், 15 லட்சம் கோவிஷீல்டு மற்றும் 5 லட்சம் கோவாக்சின் தடுப்பூசி டோஸ்களை வழங்குமாறு மத்திய அரசிற்கு தமிழக அரசு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Source : The Hindu Tamil
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.