வைகை அணையை தெர்மகோல் மூலம் மூடியதற்காக சமூக வலைதளங்களில் வைரலான அமைச்சர் செல்லூர் ராஜு, தற்போது சாதி ரீதியான விமர்சனத்தை முன் வைத்து சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
“அதிமுக அரசுக்குத் தலித் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்” – திருமாவளவன்
மதுரை அருகே உள்ள பரவையில், அம்மா மினி கிளினிக் திட்டத்தை தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு தொடங்கி வைத்தார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மதுரையில் ஏய்ம்ஸ் மருத்துவமனை அமைவதற்கு 5 ஆண்டுகள் இடைவெளி ஏன்? என தமிழக எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியது குறித்து செய்தியாளர்கள் அவரிடம் கருத்து கேட்டனர்.
#MaduraiAIIMS அமைக்க மாநில அரசு இடம் தரவில்லை என RTI அம்பலப்படுத்தியிருக்கிறது!
5 ஆண்டுகள் இடைவெளி ஏன்? பேரம் நடக்கிறதா? இதுதான் @CMOTamilNadu-ன் நிர்வாகத் திறமையா?
மத்திய-மாநில அரசுகள் ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை எடுத்திடுக!https://t.co/aX6xDRp4KZ
— M.K.Stalin (@mkstalin) December 16, 2020
இதற்கு பதிலளித்த செல்லூர் ராஜூ ”இடையன் புத்தி கவட்….” எனும் சாதி ரீதியான பழமொழியை கூற வந்து பின்னர் சுதாரித்து கொண்டு நிறுத்திவிட்டார்.
அரசு மருத்துவர்களுக்கு துரோகம் செய்த அதிமுக – ஸ்டாலின் கண்டனம்
இந்த சர்ச்சை குறித்து தன்னிலை விளக்கம் கொடுக்க அமைச்சர் மீண்டும் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது யதார்த்தமாக பேசிக் கொண்டிருக்கும்போது அந்த வார்த்தை (”இடையன் புத்தி கவட்….” ) வந்தது உண்மை எனவும் உடனே சுதாரித்துக் கொண்டு தன்னுடைய பேச்சை அப்படியே நிறுத்தி விட்டதாகவும் கூறியுள்ளார். மேலும், தான் சாதி மதங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டவன் என்று கூறியுள்ள அவர், அஇஅதிமுகவில் யாதவ சமுதாயத்தினரின் பங்களிப்பு குறித்து பேசியுள்ளார்.
“சூரப்பாவுக்கும் அதிமுகவுக்கும் இடையில் நடக்கும் பேரம் என்ன?” – மு.க.ஸ்டாலின் கேள்வி
மேலும், தேர்தல் நேரத்தில் திட்டமிட்டே இது திரித்து பரப்பபடுவதாகவும், யாரும் இதற்கு சாதிச் சாயம் பூச வேண்டாம் என கூறிய செல்லூர் ராஜூ, இதனால் அந்த சமுதாய மக்களின் உணர்வு புண்பட்டிருந்தால் அதற்காக வருந்துவதாகவும் கூறியுள்ளார்.
இதையடுத்து அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில். “அஇஅதிமுகவினர் யாரும் மதம், ஜாதி பார்த்து பழகுவதில்லை. இங்கு அனைவரும் அண்ணன் தம்பிகளாக பழகி வருகிறோம். பேட்டியின் போது உதாரணத்திற்காக நான் சொல்ல வந்த பழமொழி, தவறாக இருக்கும் என்று எண்ணி உடனே தவிர்த்து விட்டேன்” என்று பதிவிட்டுள்ளார்.
அஇஅதிமுகவினர் யாரும் மதம், ஜாதி பார்த்து பழகுவதில்லை. இங்கு அனைவரும் அண்ணன் தம்பிகளாக பழகி வருகிறோம். பேட்டியின் போது உதாரணத்திற்காக நான் சொல்ல வந்த பழமொழி, தவறாக இருக்கும் என்று எண்ணி உடனே தவிர்த்து விட்டேன்.
— Sellur K Raju (@SellurKRajuoffl) December 18, 2020
”நான் சொன்ன வார்த்தை யாதவ சொந்தங்களுக்கு மனக்காயத்தை ஏற்படுத்தி இருந்தால் எனது வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன்” என்று அமைச்சர் செல்லூர் ராஜூ ட்விட்டர் பக்கத்தில் மன்னிப்பு கேட்டுள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.