Aran Sei

அரசு சொத்துக்களை விற்பது மோடிக்கு சூடான பஜ்ஜி விற்பது போன்றது – எம். கே. வேணு

ரசியல் பொருளாதார சீர்திருத்தங்களுக்கான அணுகுமுறையை வைத்துப் பார்த்தால், 2021 ஆம் ஆண்டின் நரேந்திர மோடியிலிருந்து 2015 ஆம் ஆண்டின் நரேந்திர மோடி மிகவும் மாறுபட்டவர்.

இந்த இரண்டு அணுகுமுறைகளுக்கான காரணங்களையும், உந்துதல்களையும் தங்களுக்குள்ளையே ஒரு ஆய்வு செய்துக் கொள்ள வேண்டும்.

2015 ம் ஆண்டில் அப்போதைய நிதி அமைச்சர் அருண் ஜேட்லியின் வரைவு நிதிநிலை அறிக்கையைக் கவனியுங்கள். அந்தச் சீர்திருத்தத்தின் மையப் பகுதியைப் பலரும் அறிந்திருக்கவில்லை. அரசின் கட்டுப்பாட்டில் தொடர்ந்து இருக்க வேண்டிய ஐந்து அல்லது ஆறு பெரிய வங்கிகளைத் தவிர பிற அனைத்து பொதுத்துறை வங்கிகளையும் தனியார் மயமாக்குவதற்கு வசதியாக வங்கிகள் தேசியமயமாக்குதல் சட்டத்தை முழு பழுதுபார்ப்பு செய்யப்பட்டது. இந்த முன்மொழிவு ஜேட்லி மற்றும் அவருடைய மூத்த அதிகாரிகளால் மோடியின் முன் வைக்கப்பட்டது. உண்மையில், அதிலிருந்த ஓய்வு பெற்ற மூத்த அதிகாரிகளில் ஒருவர் இன்னும் அந்தத் தலைப்பைப் பாதுகாத்து வைத்துள்ளார். “வங்கிகள் தேசியமயமாக்கல் சட்டம் புனித பசுவாகவே நீடிக்க வேண்டுமா? ” என்பதுதான் அந்த தலைப்பு.

இசையின் நடுவே படுகொலை – மரண ஓலத்தில் இசையை ரசித்த நாஜிக்கள்

பிரதமர் மோடி அந்தச் சிந்தனையை நிராகரித்தது, முன்னாள் நிதி அமைச்சருக்கும் அவருடைய குழுவுக்கும் மிகுந்த மனவருத்தத்தைக் கொடுத்தது. ஏனெனில் இதனை அவர்களுடைய மாபெரும் சீர்திருத்தமாக அவர்கள் நினைத்திருந்தனர்‌. ஜேட்லியுடன் பணிபுரிந்த ஒரு அதிகாரியின் கருத்துப் படி இதை ஜேட்லி தனது நீடித்த மரபாக இருக்க வேண்டும் என விரும்பினார்.

வேகமாக ஆறு ஆண்டுகள் முன்னோக்கி வாருங்கள். மிகத்துல்லியமாக அதே வங்கிகள் தனியார்மயமாக்கல் முன்மொழிவு மோடியால் தற்போது ஆரத் தழுவப்பட்டுள்ளது. இவ்வளவு பெரிய மனமாற்றம் எதை விளக்குகிறது?

பொது மக்களுக்கு அதிகமான நலன்களைக் கொண்டு சேர்ப்பதற்கான இறுதி முனைத் தொடர்பாக  வங்கிகளை அரசு தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டியது அவசியம் என்பது  ஒரு வேளை அப்போது மோடியின் வாதமாக இருந்திருக்கலாம். தற்போது வங்கி ஊழியர்கள் வங்கிகளைத் தனியார் மயமாக்கலுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது போல அப்போது தெரிவித்திருந்தால் அதற்கு நடுவில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை இவ்வளவு எளிதாக நடந்திருக்காது என மோடி கணக்கிட்டிருக்கலாம்.

ஹத்ராஸ் வழக்கில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு மிரட்டல் – வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற உயர்நீதிமன்றம் பரிசீலனை

எனவே மோடி தனது முதல் பதவிக்காலத்தில் பொருளாதாரத்தைக் கையாள்வதில் இந்திரா காந்தியின் அணுகுமுறையைத் தழுவுவது போல மகிழ்ச்சியோடு நடித்திருக்கிறார். இது பொருளாதார செயல்பாடுகளிலிருந்து அரசின் முழு விலகலை வேகமாக உந்தித் தள்ளும் புதிய யுகத்தைக் கொண்டு வருவார் என எண்ணியிருந்த அவரது செம்மையான தாட்சரின் பாணி விரும்பிகளுக்கு ஏமாற்றத்தையே தந்தது.

அதே நபர்கள் தற்போது,  லாபகரமான பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகள், பிற உள்கட்டமைப்பு நிறுவனங்களான எரிவாயு குழாய்கள், மின் உற்பத்தி-வினியோகத் தொகுப்புகள் ஆகியவற்றை விற்று, கடந்தமூன்று ஆண்டுகளாக பொருளாதார வளர்ச்சி குன்றி அதனால் அரசின் வருவாய் சீர்குலைந்திருக்கும் அரசை நடத்த பணத்தைத் திரட்டுவதற்கான நடவடிக்கையில் பிரதமர் இறங்கியிருப்பதாக பரவசமடைந்து கூறுகிறார்கள். இப்போது அரசாங்க சொத்துக்களை விற்று பணம் திரட்டுவதில் தெளிவான விரக்தி உள்ளது. அதே சமயம் இந்த ஒட்டுமொத்த செயல்பாடுகளும் “தற்சார்பு இந்தியா” என்ற முழக்கத்திற்கு முரண்பாடாக கவிழ்ந்தடித்து படுத்துக் கிடக்கின்றன!

வளங்களை வளர்ப்பது முக்கியம். ஆனால்…..

நிச்சயமாக, அரசு சொத்துக்களை விற்பனை செய்வதற்கான ஒரு முக்கிய காரணம், தேவையான வளங்களைத் திரட்டுவதாகும். தனியார் துறைகளும் கூட தங்கள் வளங்களைப் பெருக்கிக் கொள்ள  தங்கள் சொத்துக்களை விற்கின்றனர்.

இன்று உலகின் ப்ளாக் ஸ்டோன் உள்ளிட்ட மிகப் பெரிய அன்னிய தனியார் பங்கு மூலதனக்கார்கள் பெரும் நில வங்கி (land bank) உரிமையாளர்களாக இருக்கிறார்கள். ஏனெனில் அவர்கள் நாடு முழுவதும் உள்ள நிலச் சொத்துக்களை  மோசமான விலைக்கு வாங்கி வைத்துள்ளனர். உள்நாட்டு முதலீட்டாளர்கள்  அதிகப்படியான நெருக்குதலால் தங்கள் முதன்மைச் சொத்துக்களின் பங்குகளைப் பன்னாட்டு நிறுவனங்களுக்கு விற்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

இலங்கை போர்க்குற்றத்திற்கு எதிராக ஐ.நா வாக்கெடுப்பு: இந்தியா ஆதரவளிக்க ஸ்டாலின் கோரிக்கை

அதானி தனது லாபகரமான எரிவாயு வினியோக திட்டங்களின் பங்குகளைப் பிரான்சின் பெரிய ஒட்டு மொத்த எண்ணெய் நிறுவனத்திற்கு விற்பனை செய்துள்ளார். இந்தியாவின் முன்னணி தொலை தொடர்பு நிறுவனமான பாரதி ஏர்டெல் நிறுவனம் படிப்படியாக தனது பங்குகளில் அந்நிய பங்குதாரர்களை ஆதிக்கம் செலுத்த அனுமதித்து வருகிறது. பரம்பரை பணக்காரரான முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனம் தனது 2 லட்சம் கோடி கடனை அடைக்கத் தனது பங்குகளைப் பன்னாட்டு நிறுவனங்களான முகநூல், கூகுள் போன்றவற்றிற்கு விற்கும் அளவு கடனில் மூழ்கி உள்ளது.

பணத்தை மீட்க, அரசு மட்டும் தனது சொத்துக்களை விற்பதில்லை. தனியார் துறையும் அதைத்தான் செய்கிறது. ஆனால் தனியார் துறையினர் தங்கள் சொத்திற்கு நல்ல விலையைப் பெறுகின்றனர்.

நிதி நெருக்கடி பொருளாதாரத்தில் முற்றிலும் பரவியுள்ளது. அரசும், தனியார் நிறுவனங்களும் கடந்த ஐந்து ஆண்டுகளாக தொடர்ந்து வரும் பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக முன்னெப்போதும் இருந்திராத அளவுக்கு நிதி நெருக்கடியை எதிர் கொண்டுள்ளனர்.

நிச்சயமாக, சிறு மற்றும் முறைசாரா துறைகள் வரைபடத்திலிருந்து, குறிப்பாக கோவிட் 19 முழு முடக்கத்திற்குப் பின்  முற்றிலும் வெளியேற்றப்பட்டு விட்டன.

’எத்தனை காலத்திற்கு இடஒதுக்கீடு தொடரும்’: உச்சநீதிமன்றத்தின் கேள்வி அடிப்படையில் தவறானது – வழக்குரைஞர் ராஜசேகரன்

2015 ல் மோடி தெளிவாக அதிக நம்பிக்கையுடனும், தன்னம்பிக்கையுடனும், தனக்குள் உறுதியுடனும் இருந்ததால் ஒட்டு மொத்தமாக பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துக்களையும், வங்கிகளையும் தனியார்மயமாக்குவது என்பதில் இறங்க முடிவு செய்யவில்லை. இன்று,  பொருளாதாரம் மாபெரும் வீழ்ச்சியில் இருக்கும் நிலையில், அரசின் வருமானத்தில் பெரும் இடைவெளி ஏற்பட்டு வரும் நிலையில், பல பத்தாண்டுகளாக இல்லாத அளவு வேலைவாய்ப்பின்மை  பெருகி வரும் நிலையில், தொற்று நோய் நெருக்கடியால் வளங்களின் பற்றாக்குறை  மேலும் மிக மோசமாக இருக்கும் நிலையில் மோடி சுவருக்கு எதிராக தன் முதுகைத் காட்டிக் கொண்டு  நிற்கிறார். (முட்டுச் சந்தில் நின்று கொண்டிருக்கிறார்)

முடிவாக, மோடியின் இந்த மாறுபட்ட நடத்தை மற்றும் அரசியல் பொருளாதாரத்தின் அடிப்படையை அணுகும் முறை சந்தர்ப்பவாதமாக இருக்கிறதேயன்றி ஆழமான நம்பிக்கை மூலம் கிடைத்த தேவையான முன்னறிவிப்புகளால் அல்ல.

புதிய தனியார் முதலீடுகள் எதுவும் வராததால் பொருளாதாரம் குப்பைமேட்டில் நிற்பதால் அவர் மிக அதிக அளவில் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களையே சார்ந்திருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். அதனால்தான் அவர்களுடைய செயல்பாடுகளை மேம்படுத்த அவர்களுக்கு கடன் மற்றும் வரிச்சலுகைகளை அள்ளி வழங்கும் மலிவான வேலையில் இறங்கி உள்ளார். பல்வேறு துறைகளிலும் பத்து பன்னிரண்டு கார்பரேட் தொடர்ந்த (champions) உருவாக்க இருப்பதாக பேசப்படுகிறது.

அவசரநிலை காலக்கட்டத்தில் சிறை சென்றவர்களுக்கு மதிப்பூதியம் – இமாச்சல் பிரதேசத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டம்

எனினும் இவையாவும் வெற்றிடத்தில் நடக்க முடியாது. (வெறுங்காற்றில் வெண்ணெய் எடுக்க முடியாது)  பொருளாதாரத்தில் ஒட்டுமொத்த தேவையின் வளர்ச்சி இன்மை இன்னும் கவலைக்கிடமாக இருக்கிறது என்பதையும் கடைசியாக கூற வேண்டிய உள்ளது.

விளம்பரத் திறன் மிக்க (brand messaging) பிரதமர் ஒட்டு மொத்தமாக தனியார்மயமாக்கலையும், சொத்துக்களை விற்று பணமாக்கும் முயற்சிகளையும் முந்தைய அரசுகள் செய்ய இயலாத இரண்டாம் தலைமுறை கட்டமைப்புப் சீர்திருத்தங்கள் என்று கவிழ்த்தி மூடப் பார்க்கிறார். மூன்று விவசாயப் சட்டங்களையும் கூட அவர் இவ்வாறுதான் கூறினார். ஆனால், இந்த சொல்லப்படும் கட்டமைப்புச் சீர்திருத்தங்களுக்கு- அது விவசாயப் சட்டங்களாகவோ அல்லது வங்கி/ காப்பீடு நிறுவன தனியார்மயமாக்கலோ எதுவாயினும் –  எத்தகைய மாபெரும் எதிர்ப்புகளை அவர் எதிர்கொண்டு வருகிறார் என்பதையும், அடுத்த சில மாதங்கள், இந்தச் சீர்திருத்தங்களை மக்கள் எவ்வாறு உணர்ந்தறிகிறார்கள்  என்பதை கையாளும் அவரது அரசியல் தகுதியைச் சோதனை செய்யும் என்பதையும் நினைவிற் கொள்க.

அரசு சொத்துக்களை என்ன விலைக்கு விற்க வேண்டும் என்பதே தனியார்மயமாக்கலில் நிற்கும் அரசைப் பீடித்திருக்கும் தந்திரமான கேள்வியாகும்.

அவர்களுக்கு இணையான தனியார் துறை நண்பர்களின் பங்கு விலைகள் மிகவும் உயர்ந்து வந்தாலும் கூட மிக அதிக லாபத்தை ஈட்டிவரும் வளங்கொழிக்கும் விரிவான  சொத்துக்களையுடைய பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விலைகள் கூட 2014 ம் ஆண்டிலிருந்து 40% வீழ்ச்சி அடைந்துள்ளன.

எடுத்துக்காட்டாக, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் என்ற ஒற்றை நிறுவனத்தின் பங்குச் சந்தை விலைகள், பட்டியலிடப்பட்டுள்ள லாபம் தரும் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களின் ஒட்டுமொத்த பங்குச் சந்தை விலையை விட 30-40% அதிகமாக உள்ளது.

‘அசாமின் வளங்களை விற்று, நம்மை டெல்லியின் காலடியில் தள்ளிய பாஜகவை தோற்கடியுங்கள்’ – சிறையிலிருந்து அழைப்புவிடுத்த அகில் கோகோய்

இதைப் போலவே, வங்கித் துறையில் எச்டிஎஃப்சி வங்கியின் சந்தை மதிப்பு பிற எல்லா பட்டியலில் உள்ள அரசு வங்கிகளின் ஒன்று கூட்டப்பட்ட சந்தை மதிப்பை விட இரு மடங்கு அதிகமாகும். தற்போதைய சந்தை விலையில் பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துக்களை விற்பது அபத்தமாகும். அரசுக்குள்ளேயே இந்தக் கேள்வி தீர்க்கப்படாமல் இருப்பதுடன், பல பத்தாண்டுகளாக  மக்கள் வரிப்பணத்தில் உருவாக்கி வளர்க்கப்ட்டு லாபத்தில் இயங்கி வரும் பொதுத்துறை நிறுவனங்களை மோடி அரசு  ஒரு பாடலுக்கு விற்கிறது என்ற காங்கிரசின் எச்சரிக்கையுடன், இப்போது சூடான அரசியல் பஜ்ஜியாக மாறி உள்ளது. இந்த அரசியல் விமர்சனத்தால் வரப்போகும் பாதிப்பை மோடியும் கூட உணர்கிறார். ஒரு அரசியல் கட்சியாக, சமூக ரீதியாக பிளவுபடுத்தும் பிரச்சினைகளில் மக்களை அரசியல் ரீதியாக அணிதிரட்டுவது பாஜகவிற்கு எளிதாக இருக்கலாம்‌. ஆனால் அதன் உலோகம் இப்போது சாதி, மதங்களைக் கடந்து நடைபெற்றுவரும் விவசாயப் சட்டங்களுக்கு எதிரான போராட்டங்கள் மற்றும் தனியார்மயமாக்கலுக்கு எதிரான வங்கி ஊழியர்களின் போராட்டங்கள் போன்ற வாழ்வாதார பிரச்சனை என்ற உலைக்களத்தில் சோதிக்கப்படுகிறது. இது மிகவும் ஆர்வமூட்டும் நிகழ்வாக இருக்கும்.

 

www.thewire.in இணைய தளத்தில் எம். கே. வேணு எழுதியுள்ள கட்டுரையின் மொழியாக்கம்

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்