இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள, தேச துரோக குற்றத்தை குறிக்கும் பிரிவு 124 A குறித்து மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட வழக்கை, உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.
சில வழக்கறிஞர்கள் ஒன்றிணைந்து தாக்கல் செய்த மனுவில், இந்த தேசதுரோக பிரிவு, அரசை விமர்சிக்கும் பத்திரிகையாளர்கள், மாணவர்கள் மற்றும் அக்கறை கொண்ட குடிமக்களின் தனி மனித சுதந்திரத்தை அச்சுறுத்தும் வகையில் பயன்படுத்தப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டிருந்ததாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
“தேச துரோக வழக்கு போடவா?” என அரசு மிரட்டுகிறது – உச்சநீதி மன்ற முன்னாள் நீதிபதி
சரியான பாதுகாப்பு அமைப்பும், இந்த சட்டத்தை பயன்படுத்துபவர்கள் பொறுப் பேற்றுக்கொள்வதற்கான வழிமுறையும் இல்லாமல் தேசதுரோக சட்டம் நீடிப்பது, சாதாரண குடிமக்களின் அடிப்படை உரிமையை பறிப்பதாக உள்ளது என்று மனுவில் கூறப்பட்டிருந்ததாக தி இந்து தெரிவித்துள்ளது.
பல்வந்த் சிங் வழக்கில், “காலிஸ்தான் வாழ்க” என்று கூறுவதை, தேசதுரோகமாக கருத முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளதும், மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
விசாரணையின் போது, பொது நன்மையை கருதி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டதாக கூறிய மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் அனூப் சௌத்ரி, காலனிய காலத்தை சேர்ந்த பிரிவு 124 A (தேச துரோகம்), ஜனநாயகத்திற்கு பொருந்தாதது என்றும், எதிர்கருத்துகளை தெரிவிப்பவர்களின் வாயை அடைப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது என்றும் கூறியதாக, தி இந்து தெரிவிக்கிறது.
விவசாயிகள் பேரணி – சசி தரூர், ராஜ்தீப் சர்தேசாய், வினோத் கே ஜோஸ் மீது தேசதுரோக வழக்கு
வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு, இந்த வழக்கை தாக்கல் செய்வதற்கு எது காரணமாக இருந்தது என்பது குறித்து மனுதாரர்கள் விளக்க வில்லை என்று தெரிவித்ததாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“ஒருவர் சிறையில் வாடுகின்றார் என்பது போன்ற முக்கியமான வழக்கு இது இல்லை. அடிப்படை பலமாக உள்ள வழக்குடன் நீதிமன்றத்தை அணுகுங்கள். தள்ளுபடி செய்கிறேன்” என்று தலைமை நீதிபதி தெரிவித்ததாக தி இந்து கூறுகிறது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.