Aran Sei

இலங்கை சந்திக்கும் பொருளாதார நெருக்கடி ஓரிரு ஆண்டுகளில் இந்தியாவிலும் ஏற்படலாம் – சீமான் எச்சரிக்கை

ரிரு ஆண்டுகளில் இந்தியாவிலும் இலங்கைக்கு ஏற்பட்டது போல பொருளாதார நெருக்கடி ஏற்படலாம் என்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு அங்குதான் கொண்டுபோய் நிறுத்தும் என்றும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழுக்கு சீமான் அளித்த சிறப்பு நேர்காணலில், பெட்ரோலியப் பொருட்கள் விலை தொடர்ந்து உயர்த்தப்படுவது குறித்த கேள்விக்கு, “பெட்ரோலியப் பொருட்கள், சுங்கக் கட்டணம் போன்றவற்றின் உயர்வால் பால், அரிசி, முட்டை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் அடக்க விலை அதிகரிக்கும். விலைவாசி மேலும் உயரும். குடும்பச் செலவு இரண்டு மடங்காகும்” என்று பதிலளித்துள்ளார்.

‘ஸ்டாலினின் கரங்கள் இனவரம்பில்லாமல் எல்லா இலங்கையருக்காவும் நீள வேண்டும்’ – இலங்கை எம்.பி., கோரிக்கை

“பெட்ரோலியப் பொருட்களின் விலையை ஒன்றிய அரசு உயர்த்திவிட்டது என்கிறது தமிழ்நாடு அரசு. சொத்து வரியை தமிழ்நாடு அரசு உயர்த்திவிட்டது என்கிறது ஒன்றிய அரசு. இப்படி பேசிப் பேசியே எங்கே போய் இவர்கள் நிறுத்துவார்கள் என்றே தெரியவில்லை” என்று அவர் கூறியுள்ளார்.

“இலங்கையின் பொருளாதார நெருக்கடியை எதிர்பார்த்தீர்களா?” என்ற கேள்விக்கு பதலளித்துள்ள சீமான், “இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கல் எதிர்பார்த்ததுதான். அதேநிலைமைக்கு நாமும் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறோம். ஓரிரு ஆண்டுகளில் இந்தியாவில் அந்த நிலை ஏற்படலாம். பெட்ரோல், டீசல் விலை உயர்வு அங்குதான் கொண்டுபோய் நிறுத்தும். இலங்கையின் நிலை நமக்கு ஒரு படிப்பினைதான்” என்று தெரிவித்துள்ளார்.

Source: இந்து தமிழ் திசை

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்