Aran Sei

சிஏஏ குறித்து மாணவர்களுக்கு பாடம் நடத்திய ஆசிரியர்கள் – தேசத் துரோக வழக்கு பதிந்த பாட்னா காவல்துறை

குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு(என்.ஆர்.சி) குறித்து தனப்பூர் உறைவிடப் பள்ளியில் படம் நடத்திய இரண்டு ஆசிரியர் குழுமீது பாட்னா காவல்துறை தேசத் துரோக வழக்கைப் பதிவு செய்திருப்பதாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

மாணவர்களுக்கு ’தேசத் துரோகம்’ தொடர்பான பாடங்களை எடுத்ததற்காக தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் (என்சிபிசிஆர்) பரிந்துரையின் பேரில் வழக்கு பதியப்பட்டிருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனப்பூர் பள்ளியில், பிப்ரவரி 15 மற்றும் 25 தேதிகளில் என்சிபிசிஆர்   நடத்திய ஆய்வில், 6 முதல் 18 வயது வரையிலான 60 மாணவிகளுக்குப் பாடமெடுப்பதற்காக இரண்டு குழுக்களுக்குப் பள்ளி நிர்வாகம் அனுமதியளித்திருப்பது தெரியவந்துள்ளதாக தி வயர் கூறியுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து விண்வெளிக்குச் செல்லும் முதல் பெண் நவ்ரா அல் மற்றொஷி – பிரதமர் ரஷீத் அல் மக்தூம் அறிவிப்பு

மாணவர்களின் வீட்டுப்பாடத்தை நோட்டை ஆய்வு செய்ததில், சிஏஏ மற்றும் என்ஆர்சி குறித்து மாணவர்களுக்கு தவறாக கற்பிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது என என்சிபிசிஆர் கூறியிருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பாட்னா காவல்துறைக்கு என்சிபிசிஆர் தலைவர் பிரியங்கா கனுங்கோ எழுதிய கடிதத்தில், “இது போன்ற பாடங்கள் மாணவர்களை இந்த நாட்டின் சட்டங்களுக்கு எதிரானவர்களாக மாற்றும்” என குறிப்பிடப்பட்டுள்ளதாக தி வயர் கூறியுள்ளது.

மார்ச் 2 ஆம் தேதி, பாட்னா துணை கண்காணிப்பாளருக்கு ஆணையம் எழுதிய கடிதத்தில், டிசம்பர் 26, 2019 ஆம் தேதி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட பாடத்தில், இது (சிஏஏ/என்ஆர்சி) சேரிகளில் வசிப்பவர்களைப் பெரும்பாலும் பாதிக்கும், ஏனெனில் இவை ஒவ்வொரு ஆண்டும் வெள்ளம் அல்லது பிற காரணங்களால் சேரிகள் சேதமடைகின்றன… சிஏஏ மசோதாவை அரசு நிறைவேற்றினால், நாம் அனைவரும் அதை எதிர்க்க வேண்டும். ” எனப் பயிற்றுவிக்கப்பட்டிருந்தது எனக் குறிப்பிடப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேட்பாளர்களை விலைக்கு வாங்குகிறதா பாஜக? – ராஜஸ்தானில் தங்கவைக்கப்பட்டுள்ள காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்கள்

இதனைத் தொடர்ந்து அந்த ஆசிரியர் குழுக்கள்மீது வழக்கு பதிய அனுமதிக்கமாறு பீகார் மாநில காவல்துறை தலைமை இயக்குனர் எஸ்.கே.சின்ஹாலுக்கு ஆணையம் கடிதம் எழுதியதை அடுத்து, அவர்கள்மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 124 ஏ (தேசத்துரோகம்), 153 ஏ (இரு பிரிவிற்கிடையே பகைமையை உருவாக்குதல்) மற்றும் சிறார் நீதி சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளதாக தி வயர் செய்தியில் குறிப்பிட்டப்பட்டுள்ளது.

புகார் தொடர்பாக விசாரிக்கப்பட்டு வருகிறது. இதுவரை யாரையும் கைது செய்யவில்லை என தனப்பூர் காவல் நிலையம் தெரிவித்துள்ளதாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்