Aran Sei

திரைக்கலைஞர் ஆயிஷா சுல்தானா மீது தேசத்துரோக வழக்கு – ஆயிஷாவுக்கு ஆதரவாக கட்சியிலிருந்து விலகிய பாஜகவினர்

ட்ச தீவைச் சார்ந்த திரைக்கலைஞர் ஆயிஷா சுல்தானா மீது தேசத்துரோக வழக்கு பதிந்ததற்கு எதிராக அத்தீவுப் பகுதியைச் சார்ந்த பாஜகவினர் கட்சியிலிந்து விலகி தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

லட்சத்தீவுகளில் கொரோனா நிலைமைகுறித்து கருத்து தெரிவித்த திரைப்பட தயாரிப்பாளர் – தேசத்துரோக வழக்கு பதிந்த காவல்துறை

திரைக்கலைஞர் ஆயிஷா சுல்தானா கேரள தொலைக்காட்சி ஒன்றில் பேசும் போது, ஒன்றிய அரசு லட்சத்தீவு நிர்வாகி பிரபுல் படேலை உயிரி ஆயுதமாக (bio-weapon) பயன்படுத்துகிறது என்று கூறியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, ஆயிஷா சுல்தானாவின் மீது லட்சத்தீவுப் பகுதியின் பாஜக தலைவர் அப்துல் காதர் ஹாஜி தேசத்துரோக சட்டங்களின் கீழ் புகார் அளித்திருந்தார்.

இந்நிலையில், ஆயிஷா சுல்தானாவின் மீது தேசத்துரோக புகார் அளிக்கப்பட்டதற்கு எதிராக, இந்த நடவடிக்கை உண்மையற்றது, ஆயிஷா சுல்தானாவையும் அவரது குடும்பத்தையும் பழிவாங்கும் விதத்தில் மேற்கொள்ளப்படுகிறது என கட்சியிலிருந்து விலகிய பாஜகவினர் தெரிவித்துள்ளதாகவும் அந்த செய்தி கூறுகிறது.

லட்சதீவைக் காக்க 12 மணிநேர உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் – போராட்டக் குரல் அரசை எட்டுமென மக்கள் நம்பிக்கை

மேலும், அவர் லட்சத்தீவு மக்களின் உரிமைக்காகவே குரல் கொடுத்துள்ளார் என்றும், படேலின் “ஜனநாயக விரோத, மக்கள் விரோத மற்றும் திகிலூட்டும்” கொள்கைகளின் தன்மைகுறித்து லட்சத்தீவு பாஜக பிரிவானது அறிந்து வைத்திருக்கிறது என்று கூறியுள்ளதாகவும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், எண்ணற்ற பாஜக தலைவர்களும், கட்சி உறுப்பினர்களும் பதவி விலகியுள்ளதாகவும், குறிப்பாக லட்சத்தீவு பாஜக மாநில செயலாளர் அப்துல் ஹமீத் முல்லிபுரா, பொதுச் செயலாளர் எம் பி சயீத் முகமது கோயா, வக்ஃப் வாரியத்தின் உறுப்பினர் உம்முல் குலூஸ் புத்தியபுரா, காதி வாரியத்தின் உறுப்பினர் சைபுல்லா பக்கியோடா மற்றும் சேட்லாட் பிரிவின் செயலாளர் ஜாபீர் சாலிஹாத் மன்ஸில் பதவி விலகியுள்ளதாகவும் அந்த செய்தி குறிப்பிடுகிறது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்