புனேவில் நடைபெறும் எல்கர் பரிஷத் நிகழ்ச்சிக்குக் காவல்துறையினரின் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாகவும், இந்நிகழ்ச்சியில் புக்கர் பரிசு பெற்ற எழுத்தாளர் அருந்ததிராய் கலந்துகொண்டதாகவும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
மகராஷ்டிரா மாநிலம் புனே நகரில், இன்று கணேஷ் கலாகிரிதா அரங்கத்தில் பீமா கோரேகான் சௌரிய தின் பெர்ன அபியான் என்ற அமைப்பு சார்பில் நடத்தப்படும் எல்கர் பரிஷத் நிகழ்ச்சி நடைபெறுவதை முன்னிட்டு அப்பகுதியில் காவல்துறையினர் அதிக அளவில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.
காசிப்பூரில் விவசாயிகள் போராட்டத்தை கலைத்த பாஜக – ஜாட் சமூகத்தின் கோபத்தை சீண்டியுள்ளதா?
நேற்று, டெல்லியில் உள்ள இஸ்ரேல் துதரகத்தின் அருகே குண்டு வெடிப்புச் சம்பவம் நடந்ததைத் தொடர்ந்து, எல்கர் பரிஷத் நிகழ்ச்சிக்குக் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாகத் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது
இந்நிகழ்ச்சியில் எழுத்தாளுரும் சமூக செயற்பாட்டாளருமான அருந்ததி ராய், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான கண்ணன் கோபிநாத், தற்கொலை செய்துகொண்ட ஹைதரபாத் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர் ரோஹித் வெமுலாவின் சகோதரர் ராஜா வெமுலா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பு உரையாற்றுகின்றனர். ரோஹித் வெமுலா பிறந்தநாளன இன்று இந்நிகழ்ச்சி நடைபெறுவது கூடுதல் கவனம் பெற்றுள்ளது.
விவசாயிகளை அடக்கும் இந்திய அரசு: பிரதமர் ஜஸ்டின் கண்டனம் தெரிவிக்க கனட எம்.பி கோரிக்கை
கடந்த டிசம்பர் 31ஆம் தேதி நடக்கவிருந்த இந்நிகழ்ச்சி கொரோனா பரவல் அச்சம் காரணத்தால் காவல்துறையினர் கூட்டம் கூட அனுமதி அளிக்காததால் அப்போது நடைபெறாமல் போனது.
இந்நிலையில், இந்நிகழ்ச்சி நடைபெற ஒய்வுப் பெற்ற நீதிபதி கோல்சே பட்டேல் என்பவர், புனே காவல்துறையினரிடம் அனுமதிகோரியதின் காரணமாக, சுமார் 200 பேர் மட்டும் கலந்துக்கொள்ள காவல்துறை தரப்பிலிருந்து அனுமதி அளிக்கப்பட்டிருப்பதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.
எல்கர் பரிஷத்தின் முன்கதை
மகராஷ்டிராவில் 1818ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதியன்று பீமா கோரேகான் பகுதியில், மகர் பட்டியலின மக்களின் படைக்கும் பிராமண பேஷ்வா பாஜிராவ் படையினருக்கும் நடைபெற்ற போரில் மகர் மக்கள் வெற்றிப்பெற்றனர். அந்த வீரர்களின் வெற்றியை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மகராஷ்டிராவில் எல்கர் பரிஷத் என்ற பெயரில் இந்நிகழ்ச்சி நடத்தப்படுவது வழக்கம்.
இதே போன்று புனேவில் 2018ஆம் ஆண்டில் நடைபெற்ற எல்கர் பரிஷத் நிகழ்ச்சி கலவரத்தில் முடிந்ததுள்ளது. இதற்கு அக்கூட்டத்தில நிகழ்த்திய உரையே காரணமெனப் புனே காவல்துறையினர் தரப்பில் புகார் தெரிவிப்பதாக தி பிரண்ட் தெரிவித்துள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.