Aran Sei

மேற்கு வங்கத்தில் வாக்குப்பதிவு இயந்திரத்துடன் உறவினர் வீட்டில் தங்கிய தேர்தல் அதிகாரி – இடைநீக்கம் செய்த தேர்தல் ஆணையம்

மேற்கு வங்கம் மாநில சட்டப்பேரவை தேர்தலுக்குப் பயன்படுத்த ஒதுக்கப்பட்டிருந்த வாக்குப்பதிவு இயந்திரத்துடன் உறவினர் வீட்டில் தங்கிய தேர்தல் பிரிவு அதிகாரியைப் பணியிடை நீக்கம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

294 தொகுதிகளில் கொண்ட மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு  8 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகின்றன. அதில் 3வது கட்டமாக 31 தொகுதிகளுக்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது.

3வது கட்ட தேர்தலை முன்னிட்டு 31 தொகுதிகளிலும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் 144ன் படி தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

செல்போனில் வரும் கொரோனா அறிவிப்புகளை நீக்க வேண்டும் : மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்

இந்நிலையில், ஹவுரா மாவட்டம் உலுபெரியா உத்தர் சட்டமன்ற தொகுதியில், வாக்குச்சாவடிக்கு நியமிக்கப்பட்டிருந்த அதிகாரி, வாக்குப்பதிவு இயந்திரத்துடன் உறவினர் வீட்டில் நேற்று தங்கியுள்ளார். இது அப்பட்டமான தேர்தல் விதிமுறை மீறல் எனக்கூறி அந்த அதிகாரியைப் பணியிடை நீக்கம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாகக் கடுமையான தண்டனை வழங்கக்கூடிய வகையில் புகார்கள் பதியப்பட்டிருக்கிறது. மேலும், அந்தப் பிரிவு அதிகாரியுடன் நியமிக்கப்பட்டிருந்த காவல்துறை அதிகாரியையும் பணியிடை நீக்கம் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அதிகாரியிடம் இருந்த வாக்குப்பதிவு மற்றும் சரிபார்ப்பு இயந்திரங்களைத் தேர்தல் இயந்திரங்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு, இந்தத் தேர்தலுக்குப் பயன்படுத்தபடாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Source : The Hindu

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்