Aran Sei

ட்விட்டர் பதிவுகளை நீக்க உத்தரவிட்டது தொடர்பாக ஆர்.டி.ஐ மனு – தகவலைத் தரமறுத்த ஒன்றிய அரசு

Image Credit : time.com

கொரோனா தொற்றை மோடி தலைமையிலான ஒன்றிய அரசு கையாண்ட விதத்தைப் பதிவிட்ட ட்விட்டர் பதிவுகளை நீக்கியது தொடர்பான தரவுகளைக் கேட்டு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட மனுவிற்கு தகவல் தரஇயலாது என்று மறுத்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், சட்டவிதிகளின் படியே கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாகவும், தேசத்தின் பாதுகாப்பு, இறையாண்மை, வெளிநாட்டு விவகாரங்கள் ஆகிய காரணங்களினாலே அந்தக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளதாக அந்த செய்தி கூறுகிறது.

தடுப்பு முகாம்களில் உள்ள 24% ரோஹிங்கிய அகதிகளுக்கு கொரோனா தொற்று – மனிதநேய அடிப்படையில் முகாமிலிருந்து விடுவிக்க வேண்டுகோள்

கடந்த மார்ச் 23 அன்று மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல்தொழிற்நுட்பத் துறை அமைச்சகம் ட்விட்டர் நிர்வாகத்திற்கு கணக்குகள் முடக்குவது தொடர்பாக அறிக்கை அனுப்பியதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து கொரோனா தொற்றை மோடி தலைமையிலான ஒன்றிய அரசு கையாண்டது தொடர்பாக விமர்சித்துப் பதிவிட்ட மேற்குவங்க மாநில அமைச்சர்கள், திரைப்பட இயக்குனர்கள், காங்கிரஸ் கட்சியைச் சார்ந்தவர்கள் உள்ளிட்ட ஏறத்தாழ 50 பேரின் ட்விட்டர் பதிவுகளை  நீக்கியாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் பதிவுகள் நீக்கப்பட்டதற்கு மூன்று நாட்கள் கழித்து பீஹாரை சார்ந்த தகவல் அறியும் உரிமை சட்ட செயல்பாட்டாளர் கன்ஹையா குமார் தாக்கல் செய்த மனுவில், எந்தச் சட்டவிதியின் அடிப்படையில் ட்விட்டர் பதிவுகள் நீக்க அரசு உத்தரவிட்டது என்று கேட்டிருந்ததகவும் தி இந்து செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘பிரச்சினைக்குரிய பள்ளியை மாநில அரசின் கட்டுப்பாட்டில் எடுக்க ஆலோசனை’ – பிஎஸ்பிபி விவகாரம் குறித்து அன்பில் மகேஷ் கருத்து

மேலும், இதுகுறித்து ட்விட்டர் நிர்வாகத்திற்கும், அரசுக்கும் இடையே நடந்த தகவல்கள்குறித்த முழுமையான ஆவணங்கள் மற்றும் இதர சமூக வலைதளப்பதிவுகள் நீக்கக்கோரி அரசு அனுப்பிய நோட்டீஸ் தொடர்பான தகவல்கள் ஆகியவற்றை கேட்டிருந்ததாகவும் அந்த செய்தி கூறுகிறது.

இந்நிலையில், நேற்றைய தினம் இந்த மனுவிற்கு பதிலளித்துள்ள ஒன்றிய அரசு, தகவல் தொழிற்நுட்ப சட்டம் பிரிவு 69 A ன் படி இந்தத் தகவல்கள் நாட்டின் பாதுகாப்பு, இறையாண்மை, வெளிநாட்டு விவகாரங்கள் சம்பந்தப்பட்டது என்று தகவலைத்தர மறுத்துள்ளதாகவும் தி இந்து செய்தியில் கூறப்பட்டுள்ளது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்