Aran Sei

நீக்கப்பட்ட சட்ட பிரிவுகளின் கீழ் பதியப்பட்டிருக்கும் வழக்குகளின் விவரங்கள் – மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

credits : the new indian express

ச்சநீதிமன்றத்தால் 2015 ஆம் ஆண்டில் நீக்கம் செய்யப்பட்ட தகவல் தொழில்நுட்ப சட்டம் 66ஏ பிரிவின் கீழ் பதியப்பட்டிருக்கும் வழக்குகள் தொடர்பாக அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு  உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்புள்ளது.

இது தொடர்பாக நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு அனைத்து உயர்நீதிமன்ற தலைமை பதிவாளருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

நீக்கம் செய்யப்பட்ட 66 ஏ பிரிவின் கீழ் வழக்குகள் பதிவு செய்தவதற்கு எதிராக அனைத்து காவல் நிலையங்களுக்கும் ஆலோசனை  வழங்க ஒன்றிய அரசுக்கு உத்தரவிடக் கோரி சிவில் உரிமைகள் மக்கள் சங்கம் (பியுசிஎல்) என்ற அரசு சாராத தன்னார்வ அமைப்பு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

அரண்செய் சிறப்பிதழ் – பெகசிஸ் எனும் உளவுக்குதிரை

அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர்.எஃப். நாரிமன் மற்றும் பி.ஆர். கவாய் அடங்கிய அமர்வு, “நீதித்துறை… இதனை தனித்தனியாக கவனிக்கும்… இந்த விவகாரம் நீதிமன்றங்கள் மட்டுமல்ல காவல்துறையினருடனும் தொடர்புடையது, (அனைத்து) மாநிலங்களுக்கு மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்படும்.” என கூறினர்.

”இது இன்று முதல் நான்கு வாரங்களுக்குள் செய்யப்பட உள்ளது. நான்கு வாரங்களுக்குப் பிறகு நீதிமன்றம் விசாரிக்கும்” என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியாக ஓங்கியொலித்த குரல்- ஒலிம்பிக் போட்டியின் பதக்க மேடையில் போராடிய கறுப்பின வீராங்கனை

நீக்கப்பட்ட சட்டங்களின்  கீழ் வழக்குகள் பதிய வேண்டாம் என்றும், பதிந்த வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என காவல்துறையினருக்கு அறிவுறுத்துமாறு அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு ஒன்றிய அரசு சில வாரங்களுக்கு முன்பு கடிதம் அனுப்பியிருந்தது.

முன்னதாக, நீக்கப்பட்ட சட்டத்தின் கீழ் 1,000க்கும் அதிகமான வழக்குகள் பதியப்பட்டிருப்பது அதிர்ச்சியும், அதிருப்தியும் அளிப்பதாக உச்சநீதிமன்றம் கடந்த மாதம் கண்டனம் தெரிவித்திருந்தது.

Source : NDTV

 

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்