Aran Sei

‘விவசாயிகள் போராட்டம் தீவிரமடைவதால், லக்னோவில் ஏப்ரல் 5 வரை ஊரடங்கு’ – உத்தரபிரதேச காவல்துறை அறிவிப்பு

விவசாயிகளின் போராட்டம் தீவிரமடைவதற்கான வாய்ப்பு உள்ளதால், உத்தரபிரதேச மாநில தலைநகர் லக்னோவில், ஏப்ரல் 5 ஆம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, நேற்று (மார்ச் 1) மாலை, லக்னோ மாவட்ட காவல்துறை ஆணையர் நவீன் அரோரா வெளியிட்ட அறிவிப்பில், விவசாயிகளின் போராட்டம் தீவிரமடைவதற்கான வாய்ப்பு உள்ளதால், லக்னோவில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை உருவாக்கக்கூடும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இப்பகுதியில் (லக்னோ) அரசியல் கட்சிகள், மாணவர் அமைப்புகள் மற்றும் விவசாய சங்கங்கள் போராட்டங்களை நடத்தக்கூடும் என்றும், அப்போராட்டங்கள் லக்னோவில் நிலவும் அமைதியான சூழ்நிலைக்கு பாதகம் விளைவித்து, தீய விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் அறிவிப்பில் நவீன் அரோரா தெரிவித்துள்ளார்.

மேலும், “மேற்கூறியவற்றைக் கருத்தில் கொண்டு, சட்டம் மற்றும் ஒழுங்கை காக்கும் பொருட்டு, ஏப்ரல் 5 ஆம் தேதி வரை, லக்னோவில் ஊரடங்கு (சட்டப்பிரிவு 144) அமல்படுத்தப்படுகிறது. இது உடனடியாக இன்று முதல் அமலுக்கு வருகிறது.” என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

விவசாயிகள் கூட்டத்தில் கலந்துகொள்ளவிருந்த பிரியங்கா காந்தி – 144 தடை உத்தரவு பிறப்பித்த உத்திர பிரதேச அரசு

மஹா சிவராத்திரி, ஹோலிகா தஹான், ஷாப்-இ-பாரத், புனித வெள்ளி, ஈஸ்டர் உள்ளிட்ட பண்டிகைகள் தொடர்ந்து வருவதால், சமூக விரோத சக்திகள் இந்த பண்டிகைகளின் போது பொது அமைதியை சீர்குலைக்க முயற்சிக்கலாம் என்றும் அறிக்கையில்  நவீன் அரோரா குறிப்பிட்டுள்ளார்.

Source: ANI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்