Aran Sei

தலித் சிறுமிகள் படுகொலை வழக்கு: சிறார் என்று அறியப்பட்ட குற்றவாளி – பெரியவர் என்பது ஆதார் அட்டை மூலம் கண்டுபிடிப்பு

த்திர பிரதேச மாநிலம், உன்னாவ், தலித் சிறுமிகள் படுகொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் மைனர் என நம்பப்பட்டு வந்த நிலையில், அவரது  வயது 19 எனத் தெரியவந்திருக்கிறது எனக் காவல்துறை கூறியுள்ளதாக தி இந்து செய்தி  வெளியிட்டுள்ளது.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருக்கும் வினய் குமார், குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து,  விஷம் கொடுத்துக் கொலை செய்தார் என்று குற்றப்பத்திரிக்கையில் சேர்க்கப்பட்டிருக்கிறது என உத்திரபிரதேச காவல்துறை கூறியிருப்பதாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாகப் பேசிய உன்னாவ் காவல்நிலைய கண்காணிப்பாளர் சுரேஷ்ராவ். ஏ.குல்கர்னி, இந்திய தண்டனைச் சட்டம் 302 (கொலைக்குற்றத்திற்கான தண்டனை), 201 (சாட்சியங்களை அழித்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டிருக்கும் நிலையில், புதிதாக 328 (விஷம் அல்லது ஆரோக்கியமற்ற மருந்தை வழங்கியதற்காகத் தண்டனை) பிரிவும் சேர்க்கப்பட்டிருக்கிறது என தெரிவித்ததாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சி.பி.எஸ்.இ. பாட நூலில் உச்சிக் குடுமியுடன் வள்ளுவர்: ’சனாதனக் கூட்டத்தின் முயற்சி முறியடிக்கப்படும்’ – வைகோ கண்டனம்

இந்த வழக்கில் இரண்டாவதாகக் குற்றம்சாட்டப்பட்டிருக்கும் நபர் மைனர் என நம்பப்பட்டு வந்த நிலையில், அவருக்கு வயது 19 என்பது அவரது குடும்பத்தினர் சமர்ப்பித்த ஆதார் அட்டைமூலம் தெரியவந்திருப்பதாகவும், அவரது வயது 13 எனக் கூறி அவரது குடும்பத்தினர் வழங்கிய கூடுதல் ஆவணங்களை ஆராய்வோம் எனக் குல்கரி கூறியதாக தி இந்து தெரிவித்துள்ளது.

குற்றம்சாட்டப்பட்ட  இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குற்றம்சாட்டப்பட்டிருக்கும் இரண்டாவது நபரின்  தாயார், அவரது மகனுக்கு 13 வயது என்றும், கொரோனா ஊடரங்கு இல்லாமல் பள்ளிகள் திறந்திருந்தால் அவரது மகன் 5 வகுப்பிற்கு சென்றிருப்பார் என கூறியதாக தி இந்து தெரிவித்துள்ளது.

’எல்லோருடைய வீட்டிலும் அம்பேத்கர் புகைப்படம்’ : விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம்

”காவல்துறையினர் கூறிய பிறகே ஆதார் அட்டையில் வயது 19 எனக் குறிப்பிட்டிருப்பது தெரியும். நாங்கள் படிப்பறிவற்றவர்கள், எனவே ஆதார் அட்டை தயாரிக்கப்பட்டபோது எங்களுக்கு அறிவுறுத்தப்பட்ட தேதியையே கொடுத்தோம்” என அவர் கூறியதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த வினய் குமாரின் வயல், சிறுமிகளின் வயலிற்கு பக்கத்தில் இருக்கிறது என்றும், ஊரடங்கு காலத்தில் வினய் குமாருக்கு அந்தச் சிறுமிகளுடன் நட்பு ஏற்பட்டிருக்கிறது எனக் காவல் துறை கூறியிருப்பதாக, அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வினய் குமார் காவல்துறைக்கு வழங்கிய வாக்குமூலத்தில், ”செல்போன் எண் கேட்டுக் கொடுக்க மறுத்த சிறுமிக்குக் கொடுக்கப் பூச்சி மருந்து கலந்த தண்ணீரை பாட்டிலில் வைத்திருந்தேன். இதை மற்ற இருவரும் குடிக்கும்போது தடுக்க முடியவில்லை. இதனையடுத்து அவர்களது உடலை அவர்களின் வயலில் நகர்த்தி விட்டுத் தப்பிவிட்டோம்” என தெரிவித்ததாக தி இந்து கூறியுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்