Aran Sei

பங்கு சந்தை மோசடி : அம்பானிக்கு 15 கோடி அபராதம்

2007 நவம்பரில், ரிலையன்ஸ் பெட்ரோலியம் லிமிடெட் நிறுவனத்தின் பங்குகளை, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் மோசடியாக விற்பனை செய்ததை கண்டுபிடித்த செபி அமைப்பு, அம்பானிக்கு அபராதம் விதித்துள்ளது என தி வயர் தெரிவித்துள்ளது.

பங்கு சந்தை ஒழுங்குமுறை அமைப்பான செபி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு 25 கோடி ரூபாய் அபராதமும், முகேஷ் அம்பானிக்கு 15 கோடி ரூபாய் அபராதமும் விதித்துள்ளது.  இதோடு கூட,  நவி மும்பையில் உள்ள எஸ்.இ.எஸ் தனியார் லிமிடெட் நிறுவனத்திற்கு (SEZ Pvt Ltd) இருபது கோடி ரூபாய் அபராதமும், மும்பையில் எஸ்.இ.எஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு பத்து கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

40 ஆண்டுகளில் முதன்முறையாக நுகர்வோர் செலவு சரிவு – வீழ்ச்சியில் பொருளாதாரம்

இந்த அபராதம் குறித்து செபி நிறுவனத்தின் அதிகாரியான பி.ஜே திலீப் வெளியிட்டுள்ள ஆணையில், “ இந்த வழக்கில் மேற்சொன்ன ஃப்யூச்சர் & ஆப்ஷன்ஸ் (F&O) பங்குகள் விற்பனைக்கு பின்னே ரிலையன்ஸ் நிறுவனம் இருந்தது பொது முதலீட்டாளர்களுக்கு தெரியவில்லை. மோசடியாக வர்த்தகம் செய்ததால், ரிலையன்ஸ் பெட்ரோலியம் லிமிடெட்(ஆர்.பி.எல்) செக்யூரிட்டி-களின்(securities ) விலையிலும்,  ஃப்யூச்சர் & ஆப்ஷன்ஸ் பங்குகளிலும் மாற்றம் வந்தது; இதனால் மற்ற முதலீட்டாளர்கள் பாதிக்கப்பட்டனர்” என்று குறிப்பிட்டுள்ளார் என்று தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

“இந்தியப் பொருளாதாரம் மீள்வதற்கு நீண்ட காலம் பிடிக்கும் ” – ஆக்ஸ்ஃபோர்ட் எகனாமிக்ஸ்

ரிலையன்ஸ் பெட்ரோலியம் நிறுவனத்தின் 4.1 சதவிகித பங்கை , பங்கு சந்தை வீழ்ந்திருந்த நேரத்தில் வாங்கி விற்றதனால் பங்கு சந்தை வர்த்தகம் பாதிக்கப்பட்டதென ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனம் மற்றும் அம்பானி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது என தி வயர் தெரிவிக்கிறது.

2020 – இந்தியா இழந்ததும் தொலைத்ததும்

2017 ஆம் ஆண்டு, இவ்வழக்கில்,  ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் வேறு சில நிறுவனங்கள், மொத்தமாக 447 கோடி ரூபாய் அபராதம் செலுத்த வேண்டுமென செபி ஆணையிட்டது. இதை எதிர்த்து ரிலையன்ஸ் நிறுவனம் மேல் முறையீடு செய்ததை செக்யூரிட்டீஸ் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் 2020 நவம்பரில் ரத்து செய்தது. அப்போது, இந்த வழக்கை உச்ச நீதிமன்றத்துக்கு கொண்டு செல்வதாக ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்