Aran Sei

காணாமல் போன பெண்ணை தேட, டீசலுக்கு பணம் கொடுக்க வேண்டும் – உத்திரபிரதேச காவல்துறை மீது காணாமல் போன பெண்ணின் தாயார் குற்றச்சாட்டு

த்திரபிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தில், காணாமல் போன சிறுமியைப் பற்றிப் புகார் தெரிவிக்க சென்ற, மாற்றுதிறனாளி தாயாரிடம், சிறுமியைத் தேட டீசல் நிரப்புவதற்காக ரூபாய் 10 முதல் 15 ஆயிரம் வரை, அந்த மாவட்ட காவல்துறையினர் லஞ்சமாகப் பெற்றதாக என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.

பிப்ரவரி 1 ஆம் தேதி கான்பூர் மாவட்ட ஆணையர் அலுவலகத்திற்கு வெளியே, உள்ளூர் ஊடகங்களிடம் பேசிய விதவை தாயான மாற்றுத்திறனாளி பெண்மனி குடியா, தனது மகள் ஒரு மாதம் முன்பு காணாமல் போனதாகவும், இது தொடர்பாகப் புகார் தெரிவித்தும் காவல்துறை இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையெனக் குற்றம்சாட்டியதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மியான்மர் இராணுவப் புரட்சி – ஆட்சிகள் மாறியும் காட்சிகள் மாறவில்லை

புகாரின் நிலை தொடர்பாகக் காவல்துறை அனுகினால் நாங்கள் தேடுகிறோம் எனச் சில முறை விரட்டியடித்ததாகவும், சில முறை தேடுவதற்கு டீசலுக்கு பணம் கொடுத்தால் தான் தேடுவோம் எனக் கூறி பணம் பெற்றதாகவும், டீசல் நிரப்பப் பணம் அளிப்பத்தற்காக உறவினர்களிடம் கடன் பெற்று 10 முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை அளித்திருக்கிறேன் எனக் குடியா ஊடகங்களுக்குத் தெரிவித்தாக என்டிடிவி குறிப்பிடப்பட்டுள்ளது.

குடியா ஊடகங்களுக்குப் பேசிய காணொளி வைரல் ஆன பிறகு, கான்பூர் காவல்துறை வெளியிட்டுள்ள ட்விட்டரில், சிறுமி காணாமல் போனதாகப் புகார் அளிக்கப்பட்டு இருக்கும் காவல்துறை எல்லைக்கு உட்பட்ட பகுதியில் பணிபுரிந்த காவல்துறை அதிகாரியை நீக்கி அவர்மீது துறைரீதியான நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலியோ சொட்டு மருந்திற்கு பதிலாக சானிடைசர் கொடுக்கப்பட்ட 12 குழந்தைகள் – கவனக்குறைவினால் மஹாராஷ்டிராவில்  நிகழ்ந்த சம்பவம்

காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்க் வெளியே நின்ற குடியாவை, புகார் அளித்த காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட காணொளியுடன் சேர்த்து சிறுமியைத் தேட நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டிருப்பதாகவும் அந்த காவல்துறையின் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

”இந்த வழக்கில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு, காவல்துறை பொறுப்பாளர்களுக்குத் தெரிவிக்கப்பட்டு இருப்பதாகவும், குடியாவின் குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்பட்டு, தவறு நடந்திருந்தால் உரியவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மூத்த காவல்துறை அதிகாரி பிரிஜேஷ் குமார் ஸ்ரீவத்சவா ஊடகங்களிடம் தெரிவித்ததாக, என்டிடிவி கூறியுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்