Aran Sei

சீமான் கடிதத்திற்கு குடியுரிமையா? – ஸ்விட்சர்லாந்து அரசு விளக்கம்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சமீப காலங்களில் பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்து சிக்கிக்கொள்வது தொடர்கதையாகி வருகிறது.

சீமான் பேசிய சர்ச்சைக்குரிய பல வீடியோக்கள் இணையம் முழுவதும் வைரலாகியுள்ளது. பல்வேறு தரப்பினரும் சீமானின் கருத்துகளுக்கு எதிர்வினையாற்றுவது வழக்கம்.

அவ்வாறு சமீபத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய சீமான், “நான் கடிதம் கொடுத்தால் பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, டென்மார்க் குடியுரிமை கொடுக்கிறது. விசா, குடியுரிமை வேண்டுபவர்களுக்கு `என்னுடன் பணியாற்றினார், நாங்கள் ஒரு அரசியல் இயக்கம்` என நான் ஒரு கடிதம் கொடுத்தால் குடியுரிமை கொடுக்கப்படுகிறது” என்றிருந்தார். இந்தக் கருத்து சர்ச்சைக்குள்ளாகியிருந்தது.

கிரிக்கெட்டில் பாகிஸ்தானிடம் தோல்வியடைந்த இந்தியா: காஷ்மீர் மாணவர்கள் மீது தாக்குதல் – உமர் அப்துல்லா வேதனை

இந்த நிலையில் சர்ச்சைக்குள்ளான இந்தக் கருத்தின் உண்மைத்தன்மை தெரிந்து கொள்ள விசாரணை செய்தோம். அதன்படி பிரான்ஸ், சுவிட்சர்லாந்து மற்றும் டென்மார்க் நாடுகளின் தூதரகம் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சகத்தை தொடர்பு கொண்டு இது தொடர்பாக விளக்கம் கேட்டிருந்தோம்.

1. சீமான் கூறியுள்ள விஷயங்கள் உண்மைத்தன்மை என்ன?

2. சம்மந்தப்பட்ட நாடுகள் ஒரு தனிநபர்/இயக்கத்தின் பரிந்துரை கடிதத்தின் அடிப்படையில் குடியுரிமை வழங்குகின்றனவா?

3. சீமான் தெரிவித்துள்ள கருத்துக்கு தங்களுடைய பதில் என்ன?  என்கிற கேள்விகளை முன்வைத்திருந்தோம்.

அதற்கு சுவிட்சர்லாந்து அரசு பதிலளித்துள்ளது. அதில், “பரிந்துரை கடிதத்தின் அடிப்படையில் யாருக்கும் குடியுரிமை வழங்கப்படுவதில்லை. சம்மந்தப்பட்ட விவகாரம் தொடர்பாக நாங்கள் எதுவும் அறிந்திருக்கவில்லை” என்று தெரிவித்தனர்.

இதன்மூலம் பரிந்துரை கடிதத்தின் அடிப்படையில் சுவிட்சர்லாந்து அரசு யாருக்கும் குடியுரிமை வழங்குவதில்லை என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கட்டுரையாளர்: மோகன், ஊடகவியலாளர் 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்