Aran Sei

பாரத் பந்த் : வேளாண் சட்டங்களுக்கு எதிராக எஸ்டிபிஐ மறியல்

தில்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகச் சாலை மறியல், ரயில் மறியல் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி உருவபொம்மை எரிப்பு போன்ற போராட்டங்களில் ஈடுபட்ட எஸ்டிபிஐ கட்சியினரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று விவசாயச் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் கடந்த இரண்டு வாரங்களாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு ஆதரவாக இன்று (டிசம்பர் 8) விவசாயச் சங்கங்கள், அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட அமைப்புகள் நாடு தழுவிய முழு அடைப்பிற்கு அழைப்பு விடுத்திருந்தனர்.

எல்லாவற்றையும் சந்தை செய்யும் என்றால் அரசு எதற்கு? : வீடியோ

இதைத் தொடர்ந்து, தமிழகத்தைச் சேர்ந்த பல கட்சிகளும், வர்த்தகச் சங்கங்களும் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவளித்துள்ளனர்.

இந்நிலையில், இன்று (டிசம்பர் 8) திண்டுக்கல் மாவட்ட இந்திய சமூக ஜனநாயகக் கட்சியைச் (எஸ்டிபிஐ) சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர், திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் பேருந்துகளை மறித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வேளாண் சட்டங்களை எதிர்த்து ரயில் மறியல்: பஞ்சாபில் வலுக்கும் போராட்டம்

அப்பொழுது, மத்திய அரசுக்கு எதிராகவும் பிரதமர் மோடிக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பியுள்ளனர். இதனை தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடியின் உருவ பொம்மையை எரித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர்.

அதேபோல், இன்று (டிசம்பர் 8), கோவை மாவட்ட இந்தியச் சமூக ஜனநாயகக் கட்சியின் (எஸ்டிபிஐ) சார்பில் கோவை ரயில் நிலையத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடைபெற்றுள்ளது.

குறைந்தபட்ச ஆதார விலை – மாநிலங்கள் கேட்டது ஒன்று, மத்திய அரசு கொடுத்தது ஒன்று

இதில் நூற்றுக்கும் மேற்பட்ட எஸ்டிபிஐ கட்சியினர் மத்திய அரசைக் கண்டித்தும் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பியுள்ளனர். அவர்கள் திடீரென ரயில் நிலையத்திற்குள் நுழைந்து ரயில் மறியலில் ஈடுபட்ட முற்படும்போது போலீசார் அவர்களைத் தடுத்து வாகனத்தில் ஏற்றித் தனியார் மண்டபத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்