Aran Sei

தமிழ்நாடு காவல்துறையின் புதிய தொழில்நுட்பம் – அப்பாவிகளை குற்றவாளிகளாகளாக்கும் அபாயம் இருப்பதாக எஸ்டிபிஐ குற்றச்சாட்டு

மிழக காவல்துறையில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் புதிய ஃபேஸ் ரெகக்னேஷன் டெக்னாலஜியால் அப்பாவிகள் குற்றவாளிகளாக சித்தரிக்கப்பட வாய்ப்பிருப்பதாக எஸ்டிபிஐ கட்சி எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார்.

தமிழக காவல்துறையின் பயன்பாட்டுக்காக சந்தேக நபர்கள், குற்றவாளிகள், காணாமல் போனவர்கள் உள்ளிட்டோரை  அடையாளம் காணும் ஃபேஸ் ரெகக்னேஷன் டெக்னாலஜி  பயன்பாட்டைத் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்ததாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

லக்கிம்பூர் வன்முறை: உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி

இந்த மென்பொருள் கண்காணிப்பு மூலம், தமிழக காவல்துறையின் குற்றம் மற்றும் குற்றவியல் கண்காணிப்பு வலைப்பின்னல் அமைப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள புகைப்பட தரவுகளுடன், ஒரு தனிநபரின் புகைப்படத்தை ஒப்பிட்டுக் குற்றவாளிகள், சந்தேக நபர்கள், காணாமல் போனவர்களை அடையாளம் காண முடியும் எனவும், காவல் நிலையத்தில் இணையதள வசதி உள்ள கணினியிலும், களப் பணியின்போது இதற்கான கைபேசி செயலி மூலமாகவும் இந்த மென்பொருளைக் காவல் அலுவலர்கள் பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபார்க் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “இன்று உலகம் முழுவதும் சிசிடிவி கண்காணிப்பு பரவலாக்கப்பட்டுவிட்டது. ஆனால் இந்த பேஸ் ரெகக்னேஷன் டெக்னாலஜி முறையைக் கொண்டு கண்காணிப்பை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்ல முடியும். இந்த முறை கண்மூடித்தனமான தானியங்கி கண்காணிப்பிற்கு வழிவகுக்கும். மேலும், இதில் ஒரு தனிமனிதனின் அன்றாட வாழ்வில் நடக்கும் ஒவ்வொன்றும் கண்காணிக்கப்பட வாய்ப்பிருக்கிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

லக்கிம்பூர் கேரியில் கொல்லப்பட்ட பத்திரிகையாளர் – சிறப்பு புலனாய்வு குழு விசாரணை கோரும் எடிட்டர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா

அமெரிக்க காவல்துறை பயன்படுத்திய அமேசான் நிறுவனத்தின் தொழில்நுட்பம் மிக துல்லியமாக குற்றவாளிகளை அடையாளம் காட்டிய அதே நேரத்தில், அமெரிக்க நாடாளுமன்றத்தைச் சேர்ந்த 28 உறுப்பினர்களை மற்ற குற்ற வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளாக அடையாளம் காட்டியதால் சர்ச்சை எழுந்தது. இதனைத் தொடர்ந்து இந்தத் தொழில்நுட்பத்தால் அப்பாவிகள் குற்றவாளிக்களாக சித்தரிக்கப்பட வாய்ப்பிருப்பதாகக் கூறி, 2019 ஆம் ஆண்டு அமெரிக்காவில் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகளவில் தொழில்நுட்பத்தில் முன்னேறிய அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளே இது போன்ற தொழில்நுட்பங்களுக்குத் தடை விதிப்பது அல்லது உபயோகத்தை குறைப்பது என்று முடிவெத்திருக்கும் நிலையில், தமிழகத்தில் இந்தத் தொழில்நுட்பம் பயன்படுத்த இருப்பது கவலையளிக்கிறது” என அந்த அறிக்கையில்  குறிப்பிடப்பட்டுள்ளது.

”காவல்துறையின் பணிகளை எளிமைப்படுத்தவும், குற்றங்களைக் குறைக்கவும் தான் இந்தத் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படுகிறது என சொல்லப்பட்டாலும், இதனால் ஏற்படும் சாதங்களை விட பாதங்களே அதிகம் என்பதை மறுக்க முடியாது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘பாஜக கொள்கையின் ஆணி வேரை அசைப்போம்’ – கர்நாடக முன்னாள் முதலமைச்சர் ஹெச்.டி.குமாரசாமி

”இந்தத் தொழில்நுட்பத்தின் துல்லியத்தன்மையில் பல பிரச்சனைகள் இருக்கின்றன. பெரும்பான்மையான ஆய்வுகளில் இதன் துல்லியத் தன்மையின் அடையாளம் காணும் அல்காரிதம்  விமர்சிக்கப்பட்டிருக்கிறது. இந்த அல்காரிதம் பல சமயங்களில் தடுமாறிவிடுகிறது எனவும், இதனால் நிரபராதிகள் குற்றவாளியாக சித்தரிக்கப்படும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது எனவும் தொழில்நுட்ப வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.” எஸ்டிபிஐ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

”ஜனநாயக தேசத்தைக் காவல்துறையின் கண்காணிப்பு தேசமாக மாற்றும் இத்தகைய அபாயகரமான தொழில்நுட்பம் இன்று தமிழகத்திலும் காலூன்றியுள்ளது கவலையளிக்கிறது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

லக்கிம்பூர் வன்முறையை கண்டித்து மகாராஷ்ட்ராவில் பந்த்: சிவசேனா தலைமையிலான ஆளும் கூட்டணி அழைப்பு

”மக்களுக்குப் பலனளிக்கும் பல்வேறு நலத்திட்டங்களை துவக்கிவைத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், ஜனநாயகத்தை கேள்விக்குட்படுத்தும் இந்த ஃபேஸ் ரெகக்னேஷன் டெக்னாலஜி திட்டத்தைப் பரிசீலனை செய்ய வேண்டும். இதன் மூலம் தவறுதலாக அப்பாவிகள் குற்றவாளிகளாக ஆக்கப்படுவார்களோ என்ற அச்சம் எழுகிறது. ஆகவே, இந்தத் தொழில்நுட்ப திட்டத்தை விவாதத்திற்கு உட்படுத்தப்பட வேண்டிய அவசியம் உள்ளது.” என குறிப்பிடப்பட்டுள்ளது.

”தொழில்நுட்ப தவறுகள்மூலம் அப்பாவிகள் யாரும் குற்றவாளிகளாக சித்தரிக்கப்பட்டு விடக் கூடாது. ஒருவருக்கு தெரியாமலே அவரின் புகைப்படங்களும், வீடியோக்களும் தவறாக பயன்படுத்தப்படும் வாய்ப்புகள் இந்தத் தொழில்நுட்பத்தில் அதிகமாக இருப்பதால், வரைமுறை இல்லாத இந்தத் தொழில்நுட்பத்தினால் சட்ட சிக்கல் அதிகமாக ஏற்படவும் வாய்ப்புகள் உண்டு என்பதை மறுக்க முடியாது.” என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா. போன்ற மனித உரிமை நிறுவனங்கள் மனித உரிமை மீறல்கள் தொடர்பான தெளிவான வரையறையை வகுத்துள்ளன. அது கண்காணிப்பு என்பது தெளிவாக குற்றம் சாட்டப்பட்டவர்களை மட்டுமே ஆதாரத்தோடு கண்காணிக்க வேண்டும் என்பதை வரையறுக்கிறது. ஆனால், இந்தத் தொழில்நுட்பம் குற்றவாளி, நிரபராதி என்ற பாகுபாடு இல்லாமல் மக்கள் அனைவரையும் கண்காணிக்கிறது. இதனால் மக்களின் தனிமனித சுதந்திரம் பாதிப்புக்கு ஆளாகும்.

லக்கிம்பூர் வன்முறையை கண்டித்து மகாராஷ்ட்ராவில் பந்த்: சிவசேனா தலைமையிலான ஆளும் கூட்டணி அழைப்பு

”ஆகவே, இந்தத் தொழில்நுட்பம் குறித்த ஆரோக்கியமான விவாதம் மிக அவசியமானது. முறையான சட்ட வரையறைகள், வழிமுறைகள் இல்லாமல் இந்தத் தொழில்நுட்பத்தை உபயோகிப்பது என்பது சுதந்திரமான ஜனநாயக நாட்டை ஒரு போலீஸ் கண்காணிப்பு தேசமாக மாற்றுவதற்கு வழிவகுக்கும்.  ஆகவே இந்தத் திட்டத்தைத் தொடர்வது குறித்து தமிழக முதல்வர் பரிசீலித்துத் திட்டத்தைக் கைவிட வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.” என எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

 

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்