Aran Sei

சொத்து வரி உயர்வு: ‘நியாயமற்ற முறையில் வரிகளை பிடுங்குவது ஜனநாயக அரசுக்கு அழகல்ல’ – எஸ்டிபிஐ கட்சி

கர்ப்புற உள்ளாட்சிகளில் சொத்துவரி 25 முதல் 150 விழுக்காடு வரை உயர்த்துவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள நிலையில், நியாயமற்ற முறையில் மக்களிடமிருந்து வரிகளை பிடுங்குவது ஒரு நல்ல ஜனநாயக அரசுக்கு அழகல்ல என்று எஸ்டிபிஐ கட்சி தெரிவித்துள்ளது.

மேலும், ஏழை-நடுத்தர மக்களை பாதிக்கும் அநியாய சொத்து வரி உயர்வை திரும்பப்பெற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து, எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்:

தமிழ்நாட்டின் சென்னை உள்ளிட்ட 21 மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் சொத்து வரி உயர்த்தப்படுவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. அதன்படி 600 சதுர அடிக்கு குறைவான உள்ள குடியிருப்புகளுக்கு 25 விழுக்காடும், 600 முதல் 1200 சதுர அடி வரை உள்ள குடியிருப்புகளுக்கு 50 விழுக்காடும், 1201 முதல் 1800 வரை உள்ள குடியிருப்புகளுக்கு 75 விழுக்காடு மற்றும் 1800 சதுர அடிக்கு மேல் உள்ள குடியிருப்புகளுக்கு 100 விழுக்காடு வரை சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளதாக அந்த செய்திக்குறிப்பு தெரிவிக்கின்றது.

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளின் சொத்து வரி உயர்த்தப்படுகிறது – தமிழ்நாடு அரசு அறிவிப்பு

அதேபோன்று, சென்னை மாநகராட்சியின் பிரதானப் பகுதிகளில் 600 சதுர அடிக்கு குறைவான குடியிருப்புக் கட்டடங்களுக்கு 50 விழுக்காடும், 600 முதல் 1,200 சதுர அடி வரையுள்ள குடியிருப்புகளுக்கு 75 விழுக்காடும், 1,201 முதல் 1,800 சதுர அடி பரப்பளவுள்ள குடியிருப்புகளுக்கு 100 விழுக்காடும், 1,801 சதுர அடிக்கு மேல் சொத்து வரி 150 விழுக்காடும் உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்றிய அரசின் 15வது நிதி ஆணையத்தின் நிபந்தனைகளின் பெயரில் குடியிருப்பு மற்றும் வணிக கட்டிடங்களுக்கு அவற்றின் பரப்பளவிற்கு ஏற்ப சொத்து வரி உயர்த்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது. நியாயமற்ற முறையில் மக்களிடமிருந்து வரிகளை பிடுங்குவது ஒரு நல்ல ஜனநாயக அரசுக்கு அழகல்ல. இந்த சொத்துவரி உயர்வை எஸ்டிபிஐ கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

சென்னை ஐஐடி மாணவி மரணம்: தமிழ்நாடு அரசு புதிய விசாரணைக் குழுவை அமைக்க எஸ்டிபிஐ வலியுறுத்தல்

சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் குடியிருப்பு மற்றும் வணிக கட்டிடங்களுக்கான வாடகை மிக அதிகமாக இருக்கும் சூழலில், இந்த அதிகரிக்கப்பட்ட சொத்துவரி உயர்வால் வாடகை வீட்டில் வசிப்பவர்களே பெரும் அளவில் பாதிக்கப்படுவர்.

ஏற்கனவே, பெட்ரோல்-டீசல் விலை உயர்வு, சுங்கச் சாவடி கட்டணம் உயர்வு, ஜிஎஸ்டி வரிவிதிப்பு ஆகியவற்றால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் கடும் சிரமங்களை சந்தித்து வரும் ஏழை நடுத்தர மக்களுக்கு இந்த சொத்துவரி உயர்வு கூடுதல் சுமையை ஏற்படுத்தும்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பெரும்பான்மை இடங்களில் மக்களின் ஆதரவுடன் ஆளும் திமுக அரசு வெற்றிபெற்ற பின்னர், இந்த சொத்து வரி உயர்வை அறிவித்திருப்பது மக்களை முதுகில் குத்தும் செயலாகும்.

‘கொரோனா ஒழிப்பு பணியில் உள்ள காசநோய் தடுப்பு பணியாளர்களை முன்களப் பணியாளர்களாக அறிவியுங்கள்’ – தமிழக அரசுக்கு எஸ்டிபிஐ கோரிக்கை

ஆகவே, தமிழக அரசு  அநியாயமான முறையில் உயர்த்தி அறிவித்துள்ள சொத்து வரி உயர்வை உடனே திரும்பப்பெற வேண்டும் என எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.  தமிழக அரசு இந்த கூடுதல் வரி உயர்வை திரும்பப் பெறாவிட்டால் எஸ்டிபிஐ கட்சி தமிழகம் தழுவிய அளவில்  மிகப்பெரும் போராட்டத்தை முன்னெடுக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு நெல்லை முபாரக் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்