Aran Sei

‘முதல்வரின் காப்பீடு திட்டத்தில் பயன்பெற அலைக்கழிக்கப்படும் கொரோனா நோயாளிகள்’ – விதிகளை எளிமையாக்க எஸ்டிபிஐ வலியுறுத்தல்

கொரோனா பரவல் சூழலைக் கருத்தில்கொண்டு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இணைய விண்ணப்பிக்கும் முறையை எளிமைப்படுத்த வேண்டும் என்று எஸ்டிபிஐ கட்சியின் தலைவர் நெல்லை முபாரக் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனாவுக்காக தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கபடுபவர்களின் கொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை, தமிழக அரசே முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஏற்கும் என்று தமிழக அரசு அறிவிப்பு செய்துள்ள நிலையில், பெரும்பாலான குடும்ப அட்டைதாரர்கள் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இணைக்கப்படாமல் உள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் தனித்துவமான வளர்ச்சிப் பாதைக்கு அச்சுறுத்தல் – கலையரசன் ஏ, எம் விஜயபாஸ்கர்

“முதல்வரின் காப்பீட்டு திட்டத்தில் இணைய அதற்கான ஆவணங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேரில் சென்று அளிக்க வேண்டும் என்கிற விதி உள்ளது. நேற்றைய முன்தினம் சிவகங்கை மாவட்டம் லாடனேந்தலைச் சேர்ந்த, மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த கொரோனா நோயாளி ஒருவர், முதல்வரின் காப்பீட்டு திட்ட அட்டை இல்லாத நிலையில், அதனை விண்ணப்பிக்க  மதுரை மருத்துவமனையில் இருந்து ஆக்சிஜன் வசதியுள்ள ஆம்புலன்ஸில் சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்துக்கு அழைத்து வரப்பட்டு, அதைப் பார்த்த மாவட்ட ஆட்சியர் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு தெரிவித்து, காப்பீடு திட்ட அதிகாரிகளை எச்சரித்ததாக செய்திகள் வெளியாயின.” என்று அவர் கூறியுள்ளார்.

பிரதமரின் கண்ணீரை முதலை கண்ணீருடன் ஒப்பிடாதீர்கள்; முதலைகள் பாவம் – தி டெலிகிராப்

இது போன்ற ஏராளமான பொதுமக்களும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளும் முதல்வரின் காப்பீடு திட்டத்தில் தங்களை இணைப்பதற்காக காத்திருக்கின்றனர் என்றும் ஆகவே, தற்போதைய கொரோனா பரவல் சூழலில் மக்களை, நோயாளிகளை அலைக்கழிக்காமல் காப்பீடு திட்டத்தில் இணைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்ல வேண்டும் என்பதை மாற்றி, விண்ணப்பித்தலை எளிமைப்படுத்த அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் நெல்லை முபாரக் வலியுறுத்தியுள்ளார்.

கொரோனா தடுப்பூசி – மருத்துவக் காப்பீடுகளின் நிலை என்ன? : ஷியாம் ராம்பாபு

மேலும், இ-சேவை மையங்கள் மூலமாகவோ, அல்லது கொரோனா சிகிச்சை அளிக்கும் ஒவ்வொரு மருத்துவமனையிலும்  இதற்காக அதிகாரியைக் கொண்டு சிறப்பு கவுண்டரை அமைத்தோ அல்லது வேறுசில எளிய நடவடிக்கைகள் மூலமாகவோ முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் முறையை எளிமைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசை தனது அறிக்கையில் எஸ்டிபிஐ கட்சியின் தலைவர் நெல்லை முபாரக்  வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்