Aran Sei

தமிழக பொறியில் கல்லூரிகளில் குறைந்த பட்டியல் மற்றும் பழங்குடியின மாணவர்களின் சேர்க்கை – ஆய்வு முடிவில் தகவல்

டந்த சில கல்வியாண்டுகளில் தமிழ்நாடு பொறியியல் கல்லூரிகளில் பட்டியல் மற்றும் பழங்குடியின மாணவர்கள் சேர்க்கையின் எண்ணிக்கை கிட்டதட்ட 50 விழுக்காடு வரை குறைந்துள்ளது.

தொழில்நுட்ப கல்வி இயக்குநரகத்தின் அதிகார வரம்பிற்குள் இருக்கும் கல்லூரிகளின் 2016 – 17 முதல் 2020 -21 ஆம் ஆண்டு கல்வியாண்டு வரையிலான காலத்தில் மேற்கொள்ளப்பட்ட சேர்க்கை எண்ணிக்கையை வைத்துச் செய்த ஆய்வில் இந்த முடிவு தெரியவந்துள்ளது.

பட்டியல் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு மத்திய அரசு வழங்கி வரும் முக்கிய திட்டங்களில் ஒன்றான போஸ்ட் மெட்ரிக்  உதவித்தொகைக்கான கட்டுப்பாடுகளை, 2017 ஆம் ஆண்டு ஆகஸ்டில் தமிழக அரசு கடுமையாக்கியது ஒரு காரணம் என கல்வியாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

அரண்செய் சிறப்பிதழ் – ஏழு தமிழர் விடுதலை

சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் அரசு மற்றும் மேலாண்மை ஒதுக்கீடு இடங்களுக்கான கல்விக் கட்டணத்தை அரசு சமன் செய்தது. இதன் பொருள் ஒதுக்கீட்டின் கீழ் சேரும் மாணவர்களின் கல்விக் கட்டணத்தின் ஒரு பகுதி மட்டுமே திருப்பியளிக்கப்பட்டது.

பராமரிப்புபடி, சுற்றுலாபடி மற்றும் புத்தக படி போன்ற ஏழு கூறுகள் இந்த திட்டத்தில் இருந்தாலும், கல்விக் கட்டணம் தான் முக்கியமானது. மற்ற படிப்புகளைவிட பொறியியல் மற்றும் மருத்துவம் போன்ற தொழில்முறை படிப்புகளுக்கான மாணவர்களுக்கு அதிகம் பலனளித்தது.

2012 முதல் 2017 வரையிலான காலக்கட்டணத்தில் சுயநிதிகல்லூரிகளுக்கான கட்டண நிர்ணயக் குழுவால் தீர்மானிக்கப்பட்டபடி, கல்விக்  கட்டணத்தை முழுமையான திரும்பப் பெற மாநில அரசு அனுமதித்தது. இந்தக் காலக்கட்டத்தில், இத்திட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களின் சேர்க்கை பெருமளவில் அதிகரித்தது.

சிறுநீர் அருந்தச்சொல்லி இளைஞரை துன்புறுத்திய உதவி ஆய்வாளர் – நடவடிக்கை எடுக்கக் கோரி தலித் அமைப்புகள் போராட்டம்

உதாரணமாக, 2011-12 ஆம் ஆண்டில் 45,315 ஆக இருந்த மாணவர்கள் சேர்க்கை, ஐந்து ஆண்டுகள் கழித்து 2017 ஆம் ஆண்டில் 1,23,199 ஆக, கிட்டத்தட்ட 270 விழுக்காடு அதிகரித்தது.

2012-13 ஆம் ஆண்டில் ரூ. 353.55 கோடியாக இருந்த உதவித்தொகை, 2017-18 ஆம் ஆண்டில் 1,256.46 ஆக உயர்த்தப்பட்டது. உதவித்தொகை தொகையில் மத்திய அரசு தனது பங்கை முழுமையாக செலுத்தவில்லை என மாநில அரசு புகார் தெரிவித்தது.

நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் நிரப்பப்படும் இடங்களைவிட அரசு ஒதுக்கீடுகளுக்கான கல்விக் கட்டணம் குறைவாக இருப்பதால், அரசு ஒதுக்கீட்டின் கீழ் இருக்கும் இடங்களைவிட நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் அதிக சேர்க்கைகளை ஊக்குவிக்கச் சுயநிதி கல்லூரிகளுக்கு ’ஊக்கத்தொகை’ உதவுவதாக அரசு கருதுகிறது.

உ.பி தேர்தல் வன்முறை: ’பாஜகவினர் பெண்களின் புடவையை இழுத்து, தாக்குதல் நடத்தியது பிரதமருக்கு தெரியாதா?’ – பிரியங்கா காந்தி கேள்வி

கற்பித்தல், உள்கட்டமைப்பு தரம் போன்ற பல்வேறு காரணங்களுக்காக தனியார் கல்லூரிகளை தேர்வு செய்ய வேண்டியுள்ளது. இதற்கு உள்நோக்கம் கற்பிக்க வேண்டிய அவசியமில்லை என அம்பேத்கர் நூற்றாண்டு இயக்கத்தின் அமைப்பாளர் எம். பரதன் தெரிவித்துள்ளார்.

ஒன்றிய, மாநில அரசுகள் 60:40 அடிப்படையில் உதவித்தொகை  பகிர்ந்தளிக்கப்படும் என வழிகாட்டுதல்களை ஒன்றிய அரசு கடந்த மார்ச் மாதம் திருத்தியமைத்தை குறிப்பிட்டுள்ள செயல்பாட்டாளர் ஜி. சந்திரமோகன், இந்தத் திருத்தத்தின் மூலம் மாநில அரசுக்கு கடந்த காலத்தைவிட சுமை குறைவாக இருக்கும் என்பதால், முந்தைய ஆட்சி நிர்ணயித்த ’கடுமையான விதிமுறைகளை’ மாநில அரசு அகற்ற வேண்டும்’ என கோரிக்கை வைத்துள்ளார்.

கியூபாவில் நிலவும் தட்டுப்பாட்டுக்கு அமெரிக்காவின் தடையே காரணம் – நாட்டை சீர்குலைக்கும் முயற்சிகளுக்கு எதிராக சமூக எழுச்சியை  உண்டாக்க அதிபர் அழைப்பு

இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு எம். பரதன் எழுதியிருக்கும் கடிதத்தில், தமிழ்நாடு அரசு உதவித்தொகைக்கு 2 ஆயிரம் கோடி ஒதுக்க வேண்டும் என்றும், இதில் ஒன்றிய அரசு 60 விழுக்காடு வழங்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

 

Source: the Hindu

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்