லட்சத்தீவு நிர்வாகம் கொண்டுவந்துள்ள சட்டங்களைத் திரும்பும் வகையில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென, 60 க்கும் மேற்பட்ட ஆய்வாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், லட்சத் தீவின் சூழலியல், மக்களின் வாழ்வாதாரம் மற்றும் கலாச்சாரத்தைப் பாதுகாக்கும் வகையில் குடியரசுத்தலைவர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறியுள்ளதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து லட்சத்தீவு ஆய்வாளர்கள் குழுமத்தைச் சார்ந்த 60 க்கும் மேற்பட்ட ஆய்வாளர்கள் கையெழுத்திட்டு இந்தக் கடிதத்தை அனுப்பியுள்ளதாகவும் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
பால் பண்ணைகளை மூடும் லட்சத்தீவுகள் நிர்வாகியின் உத்தரவு – நடைமுறைப்படுத்த கேரள உயர்நீதிமன்றம் தடை
இந்தக் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ள ஆய்வாளர்கள் இந்தப் பகுதியில் பல ஆண்டுகளாக ஆய்வில் ஈடுபட்டு வரக்கூடியவர்கள் என்றும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெரிவித்த இப்பகுதியில் வாழும் கடல்வாழ் பாலுட்டிகள் குறித்து ஆய்வில் செய்துள்ள ஆய்வாளர் தீபனி சுதாரியா,”கடல்-மக்கள்-நிலங்களுக்கு இடையிலான நுட்பமான சமநிலையை உணராமல் தீவுகளுக்கு முன்மொழியப்பட்ட எந்தவொரு கடுமையான மாற்றங்களும் திரும்பப் பெறப்பட வேண்டும், ” என்று தெரிவித்துள்ளதாகவும் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி குறிப்பிடுகிறது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.