Aran Sei

அறிவியலாளர்களின் குரலுக்கு செவிசாய்க்காத அவலம் – உண்மையை மறைத்ததா மத்திய அரசு?

கொரோனா இரண்டாம் அலையில் இந்தியா கடுமையான பாதிப்பைச் சந்திக்கும் என மத்திய அரசு நியமித்த நிபுணர்கள் குழு தெரிவித்த நிலையில், மத்திய அரசு அப்போது எந்தக் கட்டுப்பாடுகளையும் விதிக்கவில்லை என்று அக்குழுவில் உள்ள ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசால் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழுவானது புதிய மற்றும் உருமாற்றமடைந்த கொரோனா நோய் கிருமியால் இந்தியா கடுமையான பாதிப்பைச் சந்திக்கும் என்று கடந்த மார்ச் மாதத்திற்கு முன்பே எச்சரித்துள்ளனர். ஆனால், மத்திய அரசு அப்போது அதை ஏற்று எந்தவித கட்டுப்பாடுகளையும் விதிக்கவில்லை என்று அந்தக் குழுவில் உள்ள 5 ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் நெஞ்சை உலுக்குகின்றன -அமெரிக்க சட்டவல்லுனர்கள் உருக்கம்

நிபுணர்கள் விடுத்த எச்சரிக்கையைக் கருத்தில் கொள்ளாமல் முகக்கவசம் அணியாத எண்ணற்றோர் மத விழாவில் கூடியுள்ளனர். பிரதமர் மோடி உட்பட பாஜக தலைவர்கள் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இரண்டாவது அலையில் புதிய வைரசால் ஏற்படப்போகும் பாதிப்புகுறித்து கடந்த மார்ச் மாதத்திற்கு முன்பே இந்திய சார்ஸ்-கோவி-2 ஜெனிடிக்ஸ் குழு, பிரதமருடன் நேரடி தொடர்பில் உள்ள உயர் அதிகாரிகளுக்குத் தெரிவித்துள்ளது என்று அந்தக் குழுவில் உள்ள வட இந்திய ஆய்வு மையத்தின் தலைவர் கூறியுள்ளார்.

இந்திய மருத்துவ கழகத்தின் தகவல்களை பெற வழிசெய்ய வேண்டும் – 200க்கும் மேற்பட்ட ஆய்வாளர்கள் பிரதமருக்கு கடிதம்

கடந்த பிப்ரவரி மாதமே B.1.617 வகை கொரோனா வைரஸ்சை கண்டறிந்ததாகவும், அதுகுறித்து தேசிய நோய் கட்டுப்பாட்டு கழகத்திற்கு தெரிவித்ததாகவும், மகாராஷ்டிரா மாநிலத்திலிருந்து வந்த மாதிரிகளில் இந்திய வைரஸ் வகை 2 முறை மாறுப்படைந்தது குறித்தும், அது மனித செல் சுவர்களைப் பாதிப்படைய செய்ததையும் மத்திய சுகாதாரத்துறை அளித்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், உருமாற்றமடைந்த வைரஸ் மனிதரின் செல்லுக்குள் எளிதாக நுழைந்து அவரது எதிர்ப்புத்திறனை குறைத்ததை தெளிவாக அந்த அறிக்கையில் குறிப்பிட்டதாகவும் இந்திய சார்ஸ்-கோவி-2 ஜெனிடிக்ஸ் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், மார்ச் 24 அன்று அந்த அறிக்கையை வெளியிட்ட மத்திய அரசு “அதிக கவனத்தோடு” செயல்பட வேண்டும் என்று குறிப்பிடாமல், சிக்கலான வைரஸ் வகைகள் கண்டறியப்பட்டுள்ளதால் தனிமைப்படுத்துதல் மற்றும் பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும் என்று மட்டுமே தெரிவித்தது.

இந்தியாவிலிருந்து திரும்புபவர்களுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை – ஆஸ்திரேலியா அரசு அறிவிப்பு

உங்கள் எச்சரிக்கைக்குப் பின்னும் ஏன் அரசு கடுமையான விதிகளை வகுக்கவில்லை என்று அந்தக் குழுவில் உள்ள ஆய்வாளர் ஷாஹீத் ஜெமீளிடம் கேட்டபோது, “அந்த அறிக்கைக்கு அரசு போதிய கவனம் அளித்துக் கொள்கை வகுக்கவில்லை: ஒரு ஆய்வாளராக நாங்கள் வலுவான ஆதாரங்களை அளித்தோம். ஆனால், அதைவைத்து கொள்கை வகுப்பது அரசின் கடமை. அதுமட்டுமல்லாமல் அறிவியல்பூர்வமான ஆய்வுக்குக் கொள்கை வகுப்பதில் முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை” என்று அவர் தெரிவித்தார்.

இந்தியாவின் சார்ஸ்-கோவி-2 ஜெனிடிக்ஸ் குழு வெளியிட்ட இந்த அறிக்கையைக் கவனத்தில் கொண்டு மத்திய ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், குறிப்பாக தேர்தல் பிரச்சாரத்தைக் கட்டுப்படுத்த தவறியதாகவும், கொரோனா தொற்று அதிகரித்த மார்ச் மாதத்தின் இடையில் கும்பமேளாவில் லட்சக்கணக்கில் மக்கள் கூடுவதற்கு அனுமதி அளித்ததையும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்நிலையில், இந்த அறிக்கைகுறித்து கடந்த ஏப்ரல் 19 அன்று நடந்த இணையவழி உரையாடலில் தெரிவித்த தேசிய நோய் கட்டுப்பாட்டு கழகத்தின் இயக்குனர் சுஜித் குமார் சிங், “15 நாட்களுக்கு முன்பே கடுமையான ஊரடங்கு உத்தரவு பிறப்பித்திருக்க வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.

“தடுப்பூசி எங்கடா டேய்?” – தடுப்பூசி தட்டுப்பாட்டை விமர்சித்து நடிகர் சித்தார்த் ட்வீட்

இதே போன்று ஏப்ரல் 15 அன்று நடந்த மத்திய அரசு நியமித்த 21 ஆய்வாளர்களைக் கொண்ட கொரோனா நடவடிக்கை குழுவின் கூட்டத்திலும், ஊரடங்கு நடைமுறைப்படுத்தலாமென ஒருமித்த முடிவு எடுக்கப்பட்டதாக அந்தக் குழுவில் உள்ள ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஆனால், கடந்த ஏப்ரல் 20 அன்று பேசிய பிரதமர் மோடி, ஊரடங்குக்கு எதிராக, “நாட்டை ஊரடங்கிலிருந்து காப்பாற்ற வேண்டும். மாநில அரசுகள் கடைசி வாய்ப்பாக ஊரடங்கை அமல்படுத்தும் படி கேட்டுக்கொள்கிரேன்” என்று கூறினார்.

இந்நிலையில், இந்தியாவில் கடந்த ஒன்பது நாட்களில் ஒருநாளில் தலா 3,00,000 கொரோன தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இறப்பு எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

இந்தியாவிலேயே மிகமோசமாக தலைநகர் டெல்லியில் அதிக பாதிப்புகளைச் சந்தித்துள்ளது. அங்குப் பரிசோதிக்கப்படும் 10 ல் 3 பேருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

‘130 கோடி பேருடன் ஒரு கப்பல் மூழ்கிக் கொண்டிருக்கிறது’ – தீவிரமடைந்து வரும் கொரோனா குறித்து ப.சிதம்பரம் விமர்சனம்

மேலும், இந்தியா வகை உருமாற்றமடைந்த கொரோனா வைரஸ் 17 நாடுகளில் பரவியுள்ளதால் அந்நாட்டு அரசுகள் இந்தியாவிலிருந்து பயணிப்பதை தடை செய்துள்ளது.

அதுமட்டுமல்லாது, உலக சுகாதார நிறுவனம் இந்திய வைரஸ் வகையை “அபாயகரமான வகை” என்று குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், கொரோனா இரண்டாம் அலையில் அதிக பாதிப்புகளைச் சந்திக்கும் இந்தச் சூழ்நிலையை “நாம் மிகவும் மோசமான சூழ்நிலையில் இருக்கிறோம்,” மேலும், “விஞ்ஞானிகளைவிட மக்கள் அரசியல்வாதிகளின் பேச்சைத்தான் அதிகம் கேட்கிறார்கள்.”என்று மாநில அளவில் இயங்கும் காலரா மற்றும் என்டெரிக் நோய்களுக்கான மருத்துவ ஆராய்ச்சி விஞ்ஞானி சாந்தா தத்தா கூறியுள்ளார்.

கொரோனாவால் உயிரிழந்த பாஜக எம்.எல்.ஏக்கள் – யோகி ஆதித்யநாத்தின் நிர்வாகமே காரணம் என விமர்சிக்கும் பாஜக தலைவர்கள்

நாட்டில் அறிவியல் சமூகத்தின் நிலைகுறித்து தெரிவித்த INSACOG அமைப்பின் ஒரு பகுதியாக இருக்கும் செல்லுலார் மற்றும் மூலக்கூறு உயிரியல் மையத்தின் இயக்குனர் ராகேஷ் மிஸ்ரா, “, எங்கள் அறிவியலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தால் நாங்கள் இன்னும் சிறப்பாகச் செயல்பட்டிருக்க முடியும். நாங்கள் எந்தச் சிறிய வழியில் கண்டுபிடித்ததாக இருந்தாலும், அது சிறப்பாக பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் நாட்டின் அறிவியல் சமூகம் கண்டுகொள்ளப்படாமல் சோர்வடைந்துள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Source: Reuters

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்