Aran Sei

பள்ளிகள் திறக்கப்படாததால் பாதிப்புக்குள்ளாகும் மாணவர்களின் கற்றல் திறன் – அறிவியலாளர்கள் முதமைச்சர்களுக்கு கடிதம்

Image Credit : indianexpress.com

ள்ளிகளைத் திறப்பது குறித்து அறிவியல்பூர்வமாக ஆய்வு செய்ய நடவடிக்கைக் குழு அமைக்க வேண்டுமென 5௦க்கும் மேற்பட்ட அறிவியலாளர்கள் மூன்று மாநில முதமைச்சர்களுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

மூன்றில் ஒரு பங்கு அரசுப் பள்ளிகள், அங்கன்வாடிகளில் குடிநீர் வசதி இல்லை – ஏட்டளவில் மட்டுமே செயல்படுகிறதா அரசின் திட்டங்கள்?

டெல்லி மற்றும் மும்பை தேசிய தொழிநுட்பக் கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் உள்ளிட்ட ஏறத்தாழ  5௦ மருத்துவர்கள் நாடுமுழுவதிலும் இருந்து  இந்தக் கடிதத்தை  அனுபியுள்ளார்.

இந்தக் கடிதத்தில், கடந்த 16 மாதங்களாக பள்ளிகள் மூடிக்கிடப்பதால் கோடிக்கணக்கான மாணவர்களின் கற்றல் மற்றும் மேம்பாடுத்திறன் பாதிப்படைந்துள்ளது. இதேவேளையில், பள்ளிகளை மீண்டும்  பாதுகாப்புடன்  திறப்பதற்கான  சாத்தியக்கூறுகள் உள்ளது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளதாக  குறிப்பிட்டுள்ளனர்.

‘தமிழ்நாட்டில் கேந்திர வித்யாலயா பள்ளிகளில் தமிழ் இல்லையென்பது தமிழுக்கு செய்யும் துரோகம்’ – எம்.எச்.ஜவாஹிருல்லா கண்டனம்

மேலும், குறைந்த கொரோனா தொற்று விகிதம் உள்ள மாவட்டங்களில் பள்ளிகளை திறப்பதற்கு ஆதரவு தெரிவித்து ஐ.சி.எம்.ஆர் தலைவர் பல்ராம் பார்கவா மற்றும் டெல்லி எய்ம்ஸ்  இயக்குனர் ரன்தீப் குலேரியா ஆகியோர் கலந்தலோசித்தாகவும் அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.

அதுமட்டுமல்லாது,17௦ நாடுகளில் பகுதியளவில் பள்ளி திறக்கப் பட்டுள்ளதை குறிப்பிட்டு,  டெல்லி, மகாராஷ்டிரா மற்றும்  கர்நாடக  மாநில முதலமைச்சர்களுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

source; the new indian express

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்