Aran Sei

டைட்டன் பே கைக்கடிகாரம் – இந்தியாவில் முதல் முறையாக

Image Credits: The Indian Express

இந்தியாவின் முன்னணி கைக்கடிகார நிறுவனமான டைட்டன், ஸ்டேட் வங்கியுடன் இணைந்து டைட்டன் பே எனும் புதிய கைக்கடிகாரங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இக்கடிகாரத்தின் மூலம் மிக எளிமையாகப் பணம் செலுத்த முடியும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.

யோனோ எஸ்.பி.ஐ முறையின் மூலம் இந்தப் பணப்பரிவர்த்தனை நடைபெறும்படி வடிவமைக்கப்பட்டிருக்கிறது. பணம் செலுத்தும் வசதி கொண்ட கைக்கடிகாரத்தை இந்தியாவிலேயே டைட்டன் நிறுவனம்தான் முதலில் அறிமுகப்படுத்துகிறது என ஃபர்ஸ்ட் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

POS கருவியின் சென்சாரில் டைட்டன் பே கைக்கடிகாரத்தை காண்பிப்பதைக் கொண்டே 2 ஆயிரம் ரூபாய் வரையில் பணம் செலுத்தலாம். அதற்கும் மேல் பணம் செலுத்த வேண்டும் என்றால் பின் நம்பரை உள்ளிட வேண்டும். இந்த வசதியை ஸ்டேட் வங்கி கணக்காளர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும்.

இந்த டைட்டன் பே வகை கைக்கடிகாரங்கள், ஆண்களுக்கு மூன்று வடிவங்களிலும், பெண்களுக்கு இரண்டு வடிவங்களிலும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஆண்களுக்கான கைக்கடிகாரங்களின் விலை ரூ.2,995, ரூ.3,995, மற்றும் ரூ.5,995 ஆக உள்ளது. இவை கருப்பு மற்றும் பழுப்பு நிற தோலால் ஆன பட்டைகளில் வட்ட டயல்களுடன் மிகவும் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்தக் கடிகாரங்கள் கூடுதல் பொத்தான்களையும் தேதி மற்றும் நாளைக் குறிக்கும் டயல்களையும் கொண்டுள்ளது.

பெண்களுக்கான கைக்கடிகாரங்களின் விலை ரூ.3,895 மற்றும் ரூ.4,395 ஆக உள்ளது. இவையும் கருப்பு மற்றும் பழுப்பு நிறங்களில் கிடைக்கிறது. இக்கடிகாரங்களை டைட்டன் இந்தியா இணையதளத்தின் மூலம் ஆர்டர் செய்து வாங்கலாம்.

கட்டணங்களைச் செலுத்தும் வசதிக்காகக் கடிகாரத்தை pos கருவியின் அருகில் கொண்டு சென்றாலே கணிப்பதற்காக நியர் ஃபீல்ட் கம்யூனிகேஷன் சிப் (NFC) பொருத்தப்பட்டுள்ளது.

“தொழில்நுட்பத்திலும் வடிவமைப்பிலும் பல புதுமைகளைக் கொண்டு வருவதில் டைட்டன் முதன்மை நிறுவனமாக இருக்கிறது. காலத்துக்குத் தகுந்தாற்போல் மாறி வரும் எங்களது நுகர்வோரின் தேவைக்கேற்ப நாங்கள் பொருட்களைத் தயாரிக்கிறோம். உலகமே நெருக்கடி நிலையிலிருது இயல்பு நிலைக்குத் திரும்பிக் கொண்டிருக்கும் இப்புதிய இயல்பு நிலையில், விரைவான மற்றும் பாதுகாப்பான பண பரிமாற்றத்துக்கு வழிவகை செய்யும் நோக்கோடு ஸ்டேட் வங்கி எங்களுடன் இணைந்துள்ளது மிகச்சரியான முன்னகர்வு” என்று டைட்டனின் நிர்வாக இயக்குநர் சி.கே. வெங்கடராமன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்