Aran Sei

வழி தவறும் சிப்பிகள் – கடல் வெப்பமடைதல் காரணமா?

ருவ நிலை மாற்றங்களில் இருந்து தற்காத்துக்கொள்ள சில உயிரினங்கள் இடம் பெயரும். பூமியின் குளிர்ந்த பருவநிலையில் மட்டுமே வாழ பழகிய உயிரினங்களுக்கு, இச்சூழலில் இடம் பெயர்வுக்கான இடங்கள் இல்லாமல் போகும். ஆனால் வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் உயிரினங்கள் குளிர்ச்சியான நிலப்பகுதிகளில் தஞ்சம் புகுந்துக்கொள்ளும்.

செடி, மரங்கள் போன்ற தாவரங்களால் தனித்தனியாக இத்தகைய இடப்பெயர்வை நடத்த முடியாது. அந்த தாவர இனம் மொத்தமும் தங்களை காப்பாற்றிக்கொள்ள குளிர் பிரதேசத்தை நோக்கி நகரத் தொடங்கும்.

குளிர் பருவநிலை உள்ள பிரதேசங்கள் இருப்பதனாலேயே அவற்றால், அங்கு இடம் பெயர்ந்து விடமுடியாது. வாழிடங்கள் அழிப்பு அவற்றின் பாதைகளில் தடை ஏற்படுத்தும்.

ருட்கர் பல்கலைக்கழகத்தின் ஹெய்டி ஃபுச் மற்றும் அவரின் குழுவினர் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். அதாவது வாழிட அழிப்பு, குளிர்ந்த பருவநிலை உள்ள பிரதேசங்களை நோக்கிய அவற்றின் பயணத்தை தடை செய்வது மட்டுமின்றி, அவற்றை வெப்பம் அதிகம் உள்ள மண்டலங்களை நோக்கி நகர்த்தும் என்கிறார்கள்.

நன்றி : CSIRO PUBLISHING

ருட்கர் பல்கலைக்கழகம் நீல நிற சிப்பி உட்பட 50 உயிரினங்களை ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளது. இந்த நீல நிற சிப்பிகள் வட அமெரிக்காவின் கிழக்கு கடற்பகுதியில் உள்ள அட்லாண்டிக் பெருங்கடலில் காணப்படும். பருவநிலை வெப்பமடைவதால், தங்களை காப்பாற்றிக்கொள்ள குளிர்ந்த கடற்பிரதேசங்களை நோக்கிய அவற்றின் பயணம் தடைப்படுகிறது. மேலும் நீல சிப்பியை போல பல ஆழ்கடல் உயிரினங்கள் தவறான திசையை நோக்கிப் பயணிப்பதாக தங்கள் 60-ஆண்டு கால ஆய்வு முடிவுகளை கொண்டு விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

வடமேற்கு அட்லாண்டிக் பெருங்கடலின் தற்போதைய சூழல், பருவநிலை மாற்றங்களால் அதிகம் மாற்றமடையவில்லை. ஆனால் இனி மாற்றங்கள் நடக்கலாம். அதேநேரம் ஒவ்வொரு ஆண்டும் பருவ காலங்ளில் நிகழும் மாற்றங்கள் நடந்துக்கொண்டே தான் இருக்கின்றன.

பெரும்பாலும் ஆழ்கடல் உயிரினங்கள் கோடை காலத்திலேயே இனவிருத்தியில் ஈடுபடும். ஏனென்றால், கோடை காலத்தில் அதன் குஞ்சுகளுக்கு தேவையான உணவுகள் கிடைக்கும். ஆழ்கடல் அதீத வெப்பம் அடைவதால், இந்த இனவிருத்தியின் காலம் ஒரு மாதம் முன்பே தொடங்கி விடுகிறது. இதனால் அதன் குஞ்சுகள் அழிவை சந்திக்கின்றன. இதன் மூலம் ஒட்டு மொத்த இனமும் அழிவை நோக்கி நகர நேர்கிறது.

இந்த உயிரினங்களை குளிர் பிரதேச மண்டலங்களுக்கு மாற்றுவது ஒரு தீர்வாக இருக்கலாம். ஆனால் இந்தத் தீர்வு எளிதாக செய்ல்படுத்த முடியாததாகவும், அதிக பொருட் செலவை வேண்டுவதாகவும் இருக்கும். மேலும் அப்படி செய்தாலும், இது முழுக்க முழுக்க தற்காலிக திர்வாகவே இருக்கும்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்