இந்தியா, ஜெர்மன், இங்கிலாந்து மற்றும் சுவிட்சர்லாந் நாட்டை சேர்ந்த விஞ்ஞானிகளின் ஆராய்ச்சியில் மேற்கு தொடர்ச்சி மலையில் புதிய வகை மீன் இனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு ’எனிக்மச்சன்னிடே’ (Aenigmachannidae) என்று பெயரிடப்பட்டுள்ளது.
நேட்சுரல் பப்ளிஷிங் குழுமத்தின் ’சயிண்டிஃபிக் ரிப்போர்ட்’ என்ற அறிவியல் ஆய்வு இதழில் இதன் ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.
கேரள மாநிலத்தின் வடக்கு மாவட்ட நீர்நிலைகளிலும் வயல் வெளிகளிலும் கண்டுப்பிடிக்கப்பட்ட இந்த வகை மீனின் மரபணுவையும், அதன் எழும்புக்கூட்டு அமைப்பையும் பற்றி விரிவாக ஆய்வு செய்திருக்கிறார்கள். இதற்கு முன் இதே வகை மீன் குடும்பத்தை சேர்ந்த ‘எனிக்மச்சன்ன மகாபலி’ (Aenigmachan mahabali) என்ற மீன் வகையோடு இது ஒத்துப்போகிறதா என்றும் ஆய்வு செய்திருக்கிறார்கள்.
இந்த ஆய்வில் ஒரு பகுதியாக இருந்த கேரள பல்கலைக்கழகத்தின் மீன்வள மற்றும் பெருங்கடல் துறை உதவி பேராசிரியர் “க்ரிப்டோங்க்ளானிடே’ (Kryptoglanidae) என்ற ஒரு புதுவகை நன்னீர் மீன் குடும்பம் கண்டுப்பிடிக்கப்பட்டு, ஆறு வருடத்தில் இந்த புதுவகை நன்னீர் மீன் குடும்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கேரளா போன்ற சிறிய நிலப்பரப்பில் இரண்டு தனித்துவமான நன்னீர் மீன் குடும்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது முக்கியமானது. இது அந்த நிலப்பரப்பின் வளத்தை காட்டுகிறது.” என்று கூறியுள்ளார்.
’எனிக்மச்சன்னிடே’ மற்றும் ‘எனிக்மச்சன்ன மகாபலி’ என்ற இந்த இரு நன்னீர் மீன் வகைகள், கேரளாவின் மலப்புரம் மற்றும் பத்தனம்திட்டா மாவட்டங்களில் உள்ள நீர்நிலைகளிலும், வயல்களின் இடையே செல்லும் நீரோடைகளிலும், கிணறுகளிலும் காணப்படுகிறது. ’எனிக்மச்சன்னிடே’ என்ற தற்போது கண்டுப்பிடிக்கப்பட்ட மீன் வகை, 2018-ஆம் ஆண்டு கேரளாவில் ஏற்பட்ட பெருமழை வெள்ளப்பெறுக்குக்கு பின்னான நீர்நிலை மற்றும் வயல் பரப்புகளில் ஏற்பட்ட மற்றத்திற்கு பின் கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Now it's time for some fishy animation!! Have a look at the skull of the weirdo #gollumsnakehead #livingfossil #Aenigmachannidae
For those who have not yet checked out the super cool paper, have a look at https://t.co/fWFeMWUgP1 pic.twitter.com/qsr0F9Jdz3
— Rajeev Raghavan (@LabRajeev) October 3, 2020
இந்த ஆய்வில் ஈடுபட்ட ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான நீலேஷ் தஹனூக்கர்,“கேரள நிலத்தின் நீர்நிலைகளையும், அதன் தனித்துவமான வளங்களையும் படிப்படியாக ஆய்வு செய்துவருகிறோம். நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதாலும், நீர் மற்றும் மண் மாசுப்பாட்டாலும் நிலத்துக்கடியில் இருக்கும் உயிர் சூழல் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. இதன் மூலம் இந்நிலத்தின் தனித்துவமான உயரினங்களையும், தாவர வகைகளையும் நாம் கண்டறியும் முன்பே இழக்க நேரிடும்.” என்றார்.
கேரளத்தின் நிலத்தடிகளில் பல அரிய வகை உயிரினங்கள் உள்ளன. இந்த உயிரனங்களை நம்மால் நிலத்தின் மேற்பரப்பில் உள்ள நீர்நிலைகளில் காணமுடியாது. பெரும்பாலும் அந்த உயிரினங்களுக்கு பார்வை திறன் இருப்பதில்லை. இதுவரை 10 வகையான மீன் இனங்கள் கேரளத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்த ஆய்வில் பங்காற்றிய ரல்ஃப் பிட்ஸ் கூறும்போது, “என் ஆராய்ச்சி வாழ்க்கையில் பல அரியவகை மீன் இனங்களை பார்த்துள்ளேன். ஆனால் ’எனிக்மச்சன்னிடே’ மீன் வகை மட்டும் தான் முற்றிலும் வேறு விதமானது. இதை போல உலகில் வேறெங்காவது மீன் இனம் உண்டா என்று கேட்டால், இல்லை என்பது மட்டும் தான் என் ஒரே பதில். இது இந்நிலத்தில் மட்டுமே உள்ள அறிய வகை மீன்.” என்றார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.