Aran Sei

வாடிக்கையாளர்களின் தகவல்களை பகிர மாட்டோம் – கூகுள் நிறுவனம்

Image Credits: New Indian Express

ணம் பரிமாற்றுபவர்களுக்கு வெளியே எந்த மூன்றாம் தரப்பினருடனும் வாடிக்கையாளர் பரிவர்த்தனை தரவைக் கூகுள் பே பகிராது, என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

வாடிக்கையாளர்களின் பரிவர்த்தனை தரவை, மூன்றாம் தரப்பினருடன், என்.பி.சி.ஐ (NPCI) மற்றும் கட்டண சேவை வழங்கும் (PSP) வங்கிகளின் முன் அனுமதியுடன் பகிர்ந்து கொள்ள அனுமதிக்கப்படுவதாகக் கூகுள் நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் அறிக்கையை சமர்பித்ததற்கு பின்னர் கூகிளிலிருந்து இந்த மறுப்பு தெளிவுபடுத்தப்பட்டது.

“டெல்லி உயர்நீதிமன்றத்தில் கூகுள் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தின் அடிப்படையிலான பத்திரிகை அறிக்கைகள், முழுமையான உண்மைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தாது என்பதை இது தெளிவுபடுத்துவதாகும்,” என்று கூகுளின் செய்தி தொடர்பாளர் அவரது அறிக்கையில் கூறியுள்ளார்.

கூகுள் பே, யுனிஃபைட் பேமென்ட் இன்டர்ஃபேஸால் (யுபிஐ) வழங்கப்பட வழிகாட்டுதல்கள், இந்திய தேசிய கொடுப்பனவு கழகத்துக்கு (என்.பி.சி.ஐ) பொருந்தக்கூடிய சட்டங்களுக்கு முழுமையாக இணங்குகிறது என்றும் கூகுள் கூறியுள்ளது.

“மற்றும் வாடிக்கையாளர் பரிவர்த்தனை தரவை எந்தவொரு மூன்றாம் தரப்பினருடனும் பணம் பரிமாற்றுபவர்களுக்கு வெளியே பகிர்ந்து கொள்ளாது,” என்றும் கூகுளின் செய்தித்தொடர்பாளர் கூறியுள்ளார்.

தரவு உள்ளூர்மயமாக்கல், சேமிப்பு மற்றும் பகிர்வு தொடர்பான ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களை மீறியதாகக் குற்றம்சாட்டி தொடர்ந்த பொதுநல மனுவுக்குப் பதிலளிக்கும் விதமாக, நீதிபதி டி.என்.படேல் மற்றும் நீதிபதி பிரதீக் ஜலான் ஆகியோர் முன் இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

ரிசர்வ் வங்கி இதுவரை தங்கள் பதிலை தாக்கல் செய்யவில்லை என்பதால், உயர்நீதிமன்றம் இந்த வழக்கை நவம்பர் 10 ம் தேதிக்கு ஒத்திவைத்து.

கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து நீக்கப்பட்ட பேடிஎம்

சமீபத்தில் கூகிள் நிறுவனம் பிளே ஸ்டோரிலிருந்து பணப்பரிமாற்ற செயலியான “பேடிஎம் செயலியை” நீக்கியது. அந்நிறுவனத்தின் பேடிஎம் ஃபர்ஸ்ட் எனும் விளையாட்டுத் தளத்தை விளம்பரப்படுத்தி, ஆன்லைன் சூதாட்ட தவிர்ப்பு விதியை மீறியதாகக் கூறி கூகிள் இந்த நடவடிக்கையை எடுத்தது.

கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து இச்செயலி நீக்கப்பட்டிருந்தாலும், IOS க்கான பேடிஎம் செயலியை ஆப்பிள் ஆப் ஸ்டோர் மூலம் பதிவிறக்கம் செய்யும் நிலை இருந்தது.

அதே போல் புதிதாக பேடிஎம்-ஐ பதிவிறக்கம் செய்ய முடியாது என்றாலும், ஏற்கனவே இதை உபயோகிக்கும் பயனாளிகளுக்கு இதனால் எந்தப் பாதிப்பும் வராது என்று கூகுள் உறுதியளித்துள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்