Aran Sei

புதைகுழி நகரம் ‘சக்கரா’ : தோண்ட தோண்ட மம்மிகள்

செயற்கையான முறையில் வேதிப்பொருட்கள் தேய்க்கப்பட்டு, பல நூற்றாண்டுகளாக பாதுகாக்கப்பட்டு வரும் சடலத்தை மம்மிக்கள் என்பார்கள். மனிதர்கள் மட்டுமல்லாது விலங்குகளின் உடல்களும் இப்படி பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கும்.

உலக முழுதும் இது போல மம்மிகள் அகழ்வாய்ந்து கண்டுப்பிடிக்கப்பட்டாலும், எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்ட மம்மிகள் பிரபலமானவை. காரணம் கிரேக்க பாரம்பரியத்தில் மறுபிறவி நம்பிக்கை இருந்தது. இறந்து போன அரசர்கள் மறு பிறவியில் உயிர் வாழ உடல் அவசியம் என்று கூறி, அவர்களின் உடல்களை பாதுகாத்து வைக்கும் பழக்கம் ஏற்பட்டது.

நன்றி : BBC

இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட எகிப்திய மம்மிகளில் மிகவும் பழைய மம்மி ஏறத்தாழ கி.மு 3000 காலத்தை சேர்ந்தது. ஆனால் இதுவரை உலகம் முழுக்க கண்டுபிடிக்கப்பட்ட மம்மிகளில், தென் அமெரிக்காவின் சின்சொரோ மம்மிகள்தான் மிகவும் பழமையானவை. அது கி.மு 5050 காலத்தை சேர்ந்தது ஆகும்.

எகிப்தின் புகழ் பெற்ற புதைகுழி நகரமான சக்கராவிலிருந்து 27 மம்மிக்களை சமீபத்திய அகழ்வாராய்ச்சியில் தொல்லியல்துறையினரின் கண்டிப்பிடித்துள்ளனர். சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த மம்மிக்கள், உடல் உறுப்புகள் அகற்றப்பட்டு, மதத்தலைவர்களால் சடங்குகள் செய்யப்பட்டு, மரப்பெட்டிகளில் வைத்து பதப்படுத்தப்பட்டிருக்கின்றன. சென்ற ஆண்டு, இதே சக்கரா புதைக்குழி நகரில் பாதுகாக்கப்பட்ட சிங்க குட்டி, முதலை மற்றும் ராஜ நாகத்தின் மம்மிகள் கிடைத்தன.

செப்டம்பர் மாத துவக்கத்தில், 12 மம்மிகள் புதைக்குழி நகரமான சக்கராவில் அகழ்வாய்ந்து எடுக்கப்பட்டதாக எகிப்திய சுற்றுலா மற்றும் தொல்லியல்துறை அமைச்சகம் அறிவித்தது.

நன்றி : BBC

“இந்த மம்மிகள் புதைக்கப்பட்டதற்கு பின் ஒருதடவை கூட திறக்கப்படாமல் இருந்திருக்கிறது” என்று முதற்கட்ட ஆராய்ச்சியில் தெரிய வந்திருப்பதாக எகிப்திய அமைச்சகம் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

எகிப்திய சுற்றுலா மற்றும் தொல்லியல்துறை அமைச்சரான காலத் எல் எனனி, தனது ட்விட்டர் பக்கத்தில் மம்மிக்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதை ”விவரிக்க முடியாத மகிழ்ச்சி” என்று பதிவிட்டுள்ளார். மேலும் இந்த ஆராய்ச்சியில் அடுத்தடுத்து மம்மிக்கள் கிடைக்கப் பெறலாம் என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

அதைத் தொடர்ந்து இரண்டு வாரங்கள் கழித்து, இந்த 14 மம்மிக்கள் அதே நகரத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு அகழ்வாராய்ச்சி கண்டுப்பிடிப்புகளில் மொத்தம் 27 மம்மிக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

”சென்ற ஆண்டு லுசர் நகரத்தில் 30 மம்மிக்கள் கண்டுப்பிடிக்கப்பட்டது. அதற்கு பின் இப்போது கண்டுபிடிக்கப்பட்டது தான் பெரிய எண்ணிக்கையிலான கண்டுப்பிடிப்பு”.

புதைக்கப்பட்டு 2500 ஆண்டுகள் ஆனாலும் இன்னும் அதன் சாயமும் எகிப்திய எழுத்துருக்களும் அப்படியே இருப்பதாக தொல்லியல் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

நன்றி : BBC

மேலும் இவற்றின் முகங்கள் யாருடையது என்று தெரியவில்லை. ஆனால் இந்த தொல்லியல் ஆய்வு முழுதாக முடியும் பொழுது இது குறித்து தகவல் தெரியவரலாம் என்றனர். மம்மிக்களுடன் சேர்ந்து சில பழங்கால சிலைகளும் கிடைத்துள்ளன.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்