Aran Sei

ஓட்டுனரில்லா பேருந்து: சோதனை ஓட்டங்களில் வெற்றி

Image Credits: Baidu

தென்மேற்கு சீனாவின் சோங்கிங் நகராட்சியில், ஓட்டுநர் இல்லாமல் தானாக இயங்க கூடிய தொழில்நுட்பங்களைக் கொண்ட பேருந்து அறிமுகமாகி உள்ளது.

இந்த வடிவமைப்பு சீனாவின் இணையதள நிறுவனமான பைடு அப்பல்லோ மற்றும் உள்நாட்டு பேருந்து உற்பத்தி நிறுவனமான கிங் லாங் ஆகியவற்றின் கூட்டு முயற்சி ஆகும்.

பயணிகளைக் கொண்டு சுயமாக ஓடும் வாகனங்களின் சாலை சோதனைக்காகச் சோங்குங் நகராட்சி உரிமத் தகடுகளை வழங்கும். இப்பேருந்துக்காகப் பைடு நிறுவனம் 10 உரிமத் தகடுகளைப் பெற்றுள்ளது.

சீனாவில் தனது “அப்பல்லோ கோ” ரோபோடாக்சி சேவையின் ஒரு பகுதியாகச் சோங்குங்கில் உள்ள பொது சாலைகளில் அதன் தானியங்கி வாகனங்களைச் சோதிக்க பைடு அப்பல்லோ ஏற்கனவே அனுமதி பெற்றுள்ளது. இப்போது அது ‘ரோபஸ்’ என்று அழைக்கப்படும் இந்தத் தானியங்கி பேருந்துகளைச் சோதனை முடிந்து இயக்க உள்ளது.

19 அடியிலான இந்தப் பேருந்து 4 வது நிலை தொழில்நுட்பங்களைக் கொண்டுள்ளது. இந்தப் பேருந்தில் நான்கு லிடார்கள் (LiDARs), இரண்டு மில்லிமீட்டர்-அலை ரேடார்கள் மற்றும் ஏழு மோனோகுலர் கேமராக்கள் உள்ளன, மேலும் இதில் 19 பயணிகள் பயணம் செய்யலாம்.

‘ரோபஸ்’ பேருந்து துல்லியமாகப் பயணிகளை ஏற்ற இறக்க பேருந்து நிலையங்களில் நிற்கும். இந்தப் பேருந்துகள் சிக்கலான நகர்ப்புற சாலை நிலைமைகளையும் கையாளும்.

பேருந்தைப் பற்றி அறிவிப்பு வந்த அதே நாள், சோங்கிங்கில் தானியங்கி பேருந்துகள் இயங்கும் ஒரு சோதனை பகுதி திறக்கப்பட்டது.

பைடூவின் ஓட்டுனரில்லா ரோபோடாக்சிகள் ஏற்கனவே சீனாவின் பெய்ஜிங், சாங்ஷா, குவாங்சோ, சோங்கிங் மற்றும் காங்ஜோ நகரங்களில் பயன்பாட்டில் உள்ளன. தற்போது இந்தத் தானியங்கி பேருந்துகளும் ரோபோ டாக்ஸிகளுடன் இணையும்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்