Aran Sei

வரலாறு காணாத மழைப்பொழிவு – ஈரமான ஆகஸ்ட் மாதம்

இந்த ஆண்டு ஆகஸ்ட்டு மாதம் சாராசரியான மழைப் பொழிவைக் காட்டிலும் 27 சதவிகிதம் அதிகமாக  மழை பெய்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது கடந்த 120 ஆண்டுகளில் இது நான்காவது அதிகபட்ச மழைப்பொழிவு என்று வானிலை ஆய்வு மையத்தின் விஞ்ஞானி ஆர்.கே.ஜனமணி தெரிவித்துள்ளார்.

இதற்கு முன் 1926ம் ஆண்டு ஆகஸ்ட்டு மாதத்தில் சராசரியான மழை அளவினைக் காட்டிலும் 33 சதவிகிதம் அதிகமான மழை பெய்துள்ளது. 1973ம் ஆண்டு ஆகஸ்ட்டு மாதம் 27.85 சதவிகிதமாகவும், 1976ம் ஆண்டு ஆகஸ்ட்டு மாதம் 28.4 சதவிகிதமாகவும் மழைப்பொழிவு இருந்துள்ளது. அதன் பிறகு 44 ஆண்டுகள் கழித்து கடந்த ஆகஸ்ட்டு மாதத்தின் தென்மேற்கு பருவ மழையானது 27 சதவிகிதம் பெய்துள்ளது. என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

”ஜுன் முதல் செப்டம்பர் வரை தொடரும் தென்மேற்கு பருவமழையோடு, வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையும் உருவாகியிருந்ததால் மழை சதவிகிதம் உயர்ந்துள்ளது. ஆகஸ்ட்டு மாதத்தில் இயல்பாக பெய்யும் மழையளவைக் காட்டிலும் இந்த ஆண்டின் மழையளவு 9 சதவிகிதம் அதிகமாகியுள்ளது. இதில் ஆந்திர பிரதேசம், தெலங்கானா, பீகார், குஜராத், கோவா ஆகிய மாநிலங்களில் கூடுதலாக மழைப் பொழிவு இருந்திருக்கிறது. மேலும் பல்வேறு இடங்கள் மழை வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளாகவும் செய்தது.” என்று விஞ்ஞானி ஆர்.கே.ஜனமணி கூறியுள்ளார்.

இந்த பருவமழை குறித்து மத்திய நீர்வள ஆணையத்தின் அறிக்கையில்,”கடந்த 10 ஆண்டுகளில் உள்ள சராசரி  நீர்த்தேக்க அளவை விட இந்த ஆண்டு நீர் கொள்ளளவு அதிகரித்துள்ளது.  கங்கை நதி,   நர்மதா, தப்தி, மகி, சபர்மதி நதிகள், குட்ச், கோதாவரி, கிருஷ்ணா, மகாநதி, காவிரி மற்றும் கிழக்கு நோக்கியும், மேற்கு நோக்கியும் பாயும் ஆறுகளில் நீர் வரத்து அதிகமாகவே காணப்படும்.” எனக் கூறியுள்ளது.

“இந்த ஆண்டு பருவமழையானது விவசாயிகளுக்கு உதவி, உற்பத்தியை பெருக்கும். இதனால் பொருளாதாரமும் உயரும். ஆனால் அவற்றை குறித்த சரியான அளவீட்டை இப்போது கணக்கிட முடியாது” என பூவி அறிவியல் அமைச்சகத்தின் செயலாளர் எம். ராஜீவன் தெரிவித்துள்ளார்.

மேலும் “ செப்டம்பர் மாத முதல் வாரத்தில், தென் இந்திய பகுதிகளிலும், வடக்கு சமவெளி, தெற்கு தீபகற்பத்தில் மழைப்பொழிவு அதிகரித்துள்ளது. இரண்டாவது வாரம் மழையின் தீவிரம் குறைந்தாலும் மத்திய மற்றும் வட இந்திய பகுதிகளில் மழைப் பொழிவு அதிகமாக இருக்கும். மூன்றாவது வாரத்தில் நாடு முழுவதும் மழைப் பொழிவு அதிகரிக்கும். அதனையடுத்து நான்காவது வாரத்தில் மழை பொழிவு மிதமாக இருக்கும்.” என்று ராஜீவன் கூறியுள்ளார்.

இந்திய வானிலை ஆய்வுத்துறையின் (IMD) இயக்குனர் ஜெனரல் மிருத்யுஞ்சய் மஹாபத்ரா, ”செப்டம்பர் மாத மழையின் அளவானது ஆகஸ்ட்டை விட குறைவாக இருந்தாலும், அடுத்த சில நாட்களில் புதிய வானிலை அமைப்புகள் உருவாக இருப்பதால் மழை அதிகரிக்கும்.” என்று கூறினார்.

இதனை விளக்கும் விதமாக ஜெனரல் மிருத்யுஞ்சய்,” பருவமழைக்கு உதவுகிற வகையிலான ”லா நினா” –வால் பூமத்திய  ரேகையின் பசிபிக் நீரை குளிரூட்டும் நிகழ்வும்  நடந்துள்ளது. அதே சமயத்தில் கடற்பரப்பின் வெப்ப நிலையை ஒழுங்கற்றதாக வைத்திருக்கும், எதிர்மறை இந்தியப் பெருங்கடல் நீரோட்டம் ஏற்படும் வாய்ப்பும் உள்ளது. இது நீரை வெப்பப்படுத்துவதோடு தொடர்புடையது.  இந்த எதிர்மறை நீரோட்டம்”லா நினா”வின் விளைவை நடுநிலையாக்கும்” என்று கூறியிருக்கிறார்.

” நான்கு மாத பருவமழைக்காலங்களில் 13 முதல் 14 குறைந்த காற்றழுத்த பகுதிகள் இருக்கும். ஆனால் இந்த ஆண்டு ஆகஸ்ட்டில் மட்டுமே ஐந்து குறைந்த காற்றழுத்த பகுதிகள் இருந்தன. மழைக்காலத்தில் குறைந்த காற்றழுத்த பகுதியானது சுமார் 55 நாட்கள் வரை இருக்கும். ஆனால் ஆகஸ்ட்டு மாதம் மட்டும் 27 குறைந்த காற்றழுத்த நாட்கள் இருந்துள்ளன.” ஜெனரல் மிருத்யுஞ்சய் கூறியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்