Aran Sei

விண்கல்லில் சிக்கிக்கொண்ட ரோபோ – நாசாவின் முயற்சியில் பின்னடைவு

விண்கல்லின் மாதிரிகளை சுமந்து வந்த நாசா விண்கலத்தின்பிடி தளர்ந்துள்ளது. அதனால் அதில் சேகரிக்கப்பட்டிருந்த விலைமதிப்பற்ற விண்கல் துகல்கள் விண்வெளியில் பரவியுள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

ஒசைரிஸ்-ரெக்ஸ் என்ற விண்கலம், பென்னு ( பூமிக்கு அருகில் இருக்கும் சிறு விண்கல்) எனும் விண்கல்லை அடைந்த மூன்று நாட்களுக்குப் பிறகு இதுபோன்றோரு செய்தியை நாசா விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். விண்கல்லை ஆராய்ய்ச்சி செய்கின்ற பயணத்தில் இது நாசாவின் முதல் முயற்சியாகும்.

இதன் பயணத்தை தலைமேற்று நடத்தி கொண்டிருக்கும் அரிசோனா பல்கலை கழகத்தின் விஞ்ஞானி டான்டெ லாரேட்டா இந்த பயணத்தை குறித்து பேசும் பொழுது “பூமியில் இருந்து 200 கோடி மைல் தூரத்தில் இருக்கும் இடத்திலிருந்து எதிர்பார்த்ததை விட அதிகமான பொருட்களை விண்கலம் பூமிக்கு வரும்பொழுது கொண்டுவரும்“ என்று (ஏறக்குறைய 100 கிராம்) கூறியுள்ளார்.

ரோபாவின் கையில் இருந்த மாதிரி கொள்கலம் ( container ) விண்கல்லிற்குள் ஆழமாக ஊடுருவிருக்கிறது. அவ்வளவு வேகமான சக்தியில் பாறைகளை துளைத்துள்ளது. இருந்தபோதும் பாறைத்துகள்கள் அதற்கு சிக்கிக்கொண்டு,  மூடியின் விளிம்பைச் சுற்றிலும் படிந்துள்ளன.

அந்த மாதிரி கொள்கலம்  48 சென்டிமீட்டர் அளவுக்கு கடினமான, நொறுங்கிய, கருப்பு நிலப்பரப்பில் அழுத்தப்பட்டதாக விஞ்ஞானிகள் அனுமானித்துள்ளனர். “நாங்கள் இங்கே எங்கள் சொந்த வெற்றிக்கே பலியாகி இருக்கிறோம்,” என்று லாரெட்டா, அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.

மேலும் விமான கட்டுப்பாட்டாளர்கள் தடைகளை நீக்குவதற்கும், பென்னுவில் இருந்து சேகரித்த துகல்கள் வெளியேறாமல் தடுப்பதற்கும் எதுவும் செய்ய இயலாது என்றும் , சேகரித்த மாதிரிகளே கேப்ஸ்யுலுக்கு திரும்பினால்தான் உண்டு என்று கூறியுள்ளார்.

அந்த விண்கலம் பூமிக்கு வர பல இன்னும் பல காலம் ஆனாலும் கூட, வரும் செவ்வாய்கிழமைக்குள் சேகரித்த மாதிரிகளை கொண்ட கொள்கலனுக்குள் கேப்ஸ்யுலை வைக்க முயற்சி செய்து கொண்டிருப்பதாக கூறியுள்ளார் நாசாவின் அறிவியல் பணிகளின் தலைவர் தாமஸ் சர்பூச்சென்.

விண்கல்லின் மாதிரிகளை எடுக்க விண்கலத்தை விண்வெளிக்கு அனுப்பியது நாசாவின் புதிய முயற்சியாகும். இதற்கு பென்னு தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான காரணம் நமது சூரிய மண்டலத்தில் உள்ள பொருட்களை சேகரித்து எடுத்து வருவதற்கு  இதனுடைய கார்பன் நிறைந்த தன்மை உதவும் என்பதுதான்.  இந்த முயற்சியின் மூலம் கிடைக்கும் துகல்களை வைத்து விஞ்ஞானிகள் ”பல நூறு கோடி ஆண்டுகளுக்கு முன்பு கிரகங்கள் எவ்வாறு உருவாயின, பூமியில் உயிர் எவ்வாறு உருவானது என்பதையும்  புரிந்துகொள்ள நன்கு உதவும் என்று கூறியுள்ளனர்.

பென்னுவில் இருந்து விலகி ஒசைரிஸ் ரெக்ஸ் சிறுகோளின் துகல்களின் புகைப்படங்களை அனுப்பியபோது நாசா விஞ்ஞானிகள் அதிர்ச்சியும் திகைப்பும் ஒரு சேர அடைந்தனர்.

பென்னுவிலிருந்து இருந்து விண்கலம் விலகிப்போனபோது சிறுகோளின் துகல்கள் விண்கலத்தை சுற்றி தெரியப்பட்டது .ரோபோவின் கை மறுபடியும் பொறுத்தப்பட்டத்ற்கு பின்பு நிலைமை சீரானது ஆனால் ஏற்கனவே எவ்வளவு இழந்தது என்பதை சரியாக அறிய முடியவில்லை என்று கூறினார் லொரேட்டா.

இந்த முயற்சியில் “குறைந்தபட்சம் 60 கிராம் துகல்களை கொண்டுவருவதற்கு 5600 கோடி ரூபாய் செலவு செய்யப்படுகிறது”.

ஒசைரிஸ்-ரெக்ஸ் மார்ச் மாதத்தில் விண்கல்லின் அருகிலிருந்து வெளியேறும் என்றும் , சேகரிக்கப்பட்ட துகல்கள் பூமியை வந்தடைய 2023 ஆம் ஆண்டு ஆகும். இது பூமிக்கும் பென்னுவிற்கும் இருக்கும் தூரத்தை வைத்து கணக்கிடப்பட்டதாகும் .இந்த விண்கலம் கேப் கேனவரில் இருந்து அனுப்பட்டு ஏழு ஆண்டுகள் ஆகின்றது.

நிகழ்வுகளின் திடீர் திருப்பத்தின் காரணமாக, விஞ்ஞானிகள் எவ்வளவு மாதிரிகளை இது சேகரித்து கொண்டு வருகிறது என்பதை பூமிக்கு வந்த பிறகு தான் பார்க்க முடியும்  என்று கூறியுள்ளனர். மேலும் அது சேகரித்து வைத்த அளவை கணக்கிட விண்கலத்தை சுழற்ற திட்டமிட்டனர். ஆனால் அது இன்னும் அதிகமான பாதிப்பை ஏற்படுத்துமோ என்று அதை கைவிட்டனர்.

“எங்களிடம் எவ்வளவு இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள பூமிக்கு வரும் வரை நாங்கள் காத்திருக்க வேண்டியிருக்கும் என்று நான் நினைக்கிறேன்” என்று லாரெட்டா செய்தியாளர்களிடம் கூறினார்.

“நீங்கள் நினைத்துப் பார்க்கிறபடி, அது கடினம். ஆனால் நல்ல செய்தி என்னவென்றால், நாங்கள் நிறைய விஷயங்களைக் காண்கிறோம். ” என்றும் கூறினார்

இதற்கிடையில், டிசம்பர் மாதத்தில்.ஜப்பான் அதன் இரண்டாவது தொகுதி மாதிரிகளை வேறு விண்கல்லில் இருந்து எடுக்கவுள்ளது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்