Aran Sei

நாம் நினைப்பதைவிட வேகமாக உருகும் பனிக்கட்டிகள் – ஆய்வில் தகவல்

பூமி வெப்பமடைதல் காரணமாக அண்டார்டிகா கண்டத்தின் பனிக்கட்டிகள் உருகி வருவது குறித்து பல ஆண்டுகளாகவே விஞ்ஞானிகளும் இயற்கை ஆர்வலர்களும் எச்சரித்து வருகிறார்கள். ஆனால் இப்போது இந்த பிரச்சனை மோசமடைந்து கொண்டிருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். எதிர்பார்த்த வேகத்தை விட, இப்போது பனிக்கட்டி உருகுதல் அதிகரித்துள்ளது.

பூமி வெப்பமடைவதால் ஒட்டு மொத்த காலநிலையில் (Climate) மாற்றம் ஏற்படுகிறது. அது வளி மண்டலத்திற்குள் உள்ள காலநிலையையும் சேர்த்து பாதிக்கிறது. அதில் மாற்றங்களை ஏற்படுத்துகிறது. இதனால் பூமியின் மேற்பரப்பில் உள்ள பனிக்கட்டிகள் வெப்பமடைந்து உருகத் துவங்குகின்றன.

இந்த தொடர் காலநிலை மாற்றங்களால் 2100-ஆம் ஆண்டில், பூமியின் கடல்மட்டம் 2.7 அங்குலம் முதல் 4.3 அங்குலம் உயரும் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.

இதற்கு முந்திய ஆய்வுகளில் வளி மண்டலத்திற்குள் உள்ள காலநிலையில் ஏற்படும் மாற்றத்தை பெரிதாக எடுத்துக்கொள்ளாததால், பனிக்கட்டிகள் உருகும் வேகத்தை துள்ளியமாக கணிக்க முடியாமல் போனது. கடல் மட்டம் உயர்ந்து வருது இப்போதைக்கு பெரிய பிரச்சனையாக இருக்காது என்று தோன்றும், ஆனால் இதன் தாக்கம் பெரிய பேரழிவுகளுக்கு வழிவகுக்கும்.

அண்டாடிகா குறித்த ஆய்வறிக்கையின் இணை ஆசிரியரான க்ரிஸ் ஃபாரெஸ்ட் கூறும்போது “இதன் தாக்கம் ஒவ்வொரு புயல்களின் போதும், அதோட சேர்ந்துக்கொள்கிறது. அதை பெரிய சூறாவளியாக மாற்றுகிறது. அதன் மூலம் பெரும் சேதங்களை உருவாக்குகிறது” என்கிறார்.

நன்றி : The Telegraph

காலநிலை மாற்றத்தை பற்றிய பெரும்பாலான ஆராய்ச்சிகள், காலநிலை மாதிரிகளின் முடிவுகளை சராசரியாக எடுத்துக்கொள்கின்றன. அதை வைத்து, வெப்பமடைதலில் தாக்கங்களை ஆய்வு செய்யப்படுகிறது. இதனால், உச்சபட்ச காலநிலை மாற்றங்கள் கண்டுக்கொள்ளாமல் விடப்படுகிறது.

இது பற்றி க்ரிஸ் ஃபரெஸ்ட் கூறும்போது “இப்படி சராசரிகளை மட்டும் வைத்துக்கொண்டு ஆராய்வதால், ஒவ்வொரு ஆண்டும் அது தொடும் உச்சபட்ச அளவுகளை பார்க்க தவறி விடுகிறோம்” என்கிறார்.

அதிகப்படியான சூரிய வெளிச்சமும், அதிக அளவிலான வெட்பம் நிறைந்த நாட்களும், காலநிலை மாறுதல்களால் உருவாவதே. இனி வரும் நாட்களில், பனிக்கட்டிகள் அதிகமாக உருகும். வெட்பத்தின் அளவு, சராசரியை தாண்டி செல்லும்.

மேலும் வளி மண்டலத்தில் ஏற்படும் மாற்றத்தையும் நாம் கணக்கில் கொள்ளவேண்டும். இந்த பனி உருகலில் அதன் தாக்கமும் குறிப்பிடத்தகும் படியாக உள்ளது. பெருங்கடல்களில் நிகழும் மாற்றங்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்படவுள்ளன.

”இந்த அதிகப்படியான பனிக்கட்டி உருகலுக்கு காரணமான இந்த பிரச்சனையை நாம் உடனடியாக கவனத்தில் எடுத்துக்கொண்டு, அடுத்தக்கட்ட ஆய்வுகளையும், தற்காப்புகளையும் செய்ய வேண்டும். ஏனென்றால், நாம் எதிர்பார்த்ததை விட வேகமாக பனிக்கட்டிகள்  உருகிக்கொண்டிருக்கின்றன.” என்கிறார் க்ரிஸ் ஃபரெஸ்ட்.

(இது Businessinsider.in தளத்தில் வந்த கட்டுரையின் மொழியாக்கம்)

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்