Aran Sei

அமெரிக்க அதிபர் தேர்தல் – விண்வெளியில் அமைக்கப்பட்ட வாக்குச் சாவடி

நாசா வெளியிட்டுள்ள புகைப்படம்

மெரிக்க அதிபரை தேர்வு செய்ய விண்வெளியில் இருந்து வாக்குச் செலுத்தியிருக்கிறார் விண்வெளி வீரர் கேட் ரூபின். பூமியிலிருந்து 250 மைல்களுக்கு அப்பால் இருந்து தன்னுடைய வாக்கைப் பதிவு செய்துள்ளார்.

சர்வதேச விண்வெளி வாக்குச்சாவடி மையத்தில் இருந்து அவர் வாக்குச் செலுத்துவது இது இரண்டாவது முறை. 2016-ம் ஆண்டு தேர்தலின் போதும் அவர் விண்வெளியில் இருந்துதான் வாக்குச்செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமேரிக்காவின் டெக்சாஸ் மாநிலம் 1997-ம் ஆண்டு, விண்வெளியில் இருந்து வாக்குச் செலுத்துவதற்காக  சட்டம் இயற்றியது. அதன் பிறகு விண்வெளியில் இருந்து வாக்குச்செலுத்துவது இயல்பான ஒன்றாக மாறியுள்ளது.

விண்வெளியிலிருந்து முதன்முதலாக வாக்கு செலுத்திய நபர் டேவிட் வொல்ஃப் என்ற விண்வெளி வீரர். அவர் எம்ஐஆர் விண்வெளி நிலையத்தில் இருந்து தன் வாக்கைச் செலுத்தினார். அதன் பிறகு நாசாவைச் சேர்ந்த பல விண்வெளி வீரர்கள் விண்ணிலிருந்து வாக்குச் செலுத்தியுள்ளனர்.

விண்வெளியில் வாக்குச்செலுத்தும் நடைமுறை ஃபெடரல் அஞ்சல் அட்டை விண்ணப்பத்தை (எஃப் பி சி ஏ) நிரப்புவதன் மூலம் தொடங்குகிறது. அமேரிக்க இராணுவ வீரர்களும் அவர்களது குடும்பத்தினரும், வேறு நாடுகளில் சேவை செய்யும் போது, இந்தக் கடிதத்தைதான் நிரப்புகிறார்கள். விண்வெளிக்கு செல்வதற்கு முன்பு விண்வெளி வீரர்கள் இந்த விண்ணப்பத்தை நிரப்புவார்கள். அவர்களுடைய ‘எஃப்பிசிஏ’ ஒப்புதல் பெற்றவுடன், விண்வெளி வீரரால் வாக்குச் செலுத்த முடியும்.

விண்வெளி வீரரின் மாவட்டத்தில் தேர்தலைக் கண்காணிக்கும் கிளார்க் ஹுயுஸ்டனில் இருக்கும் ஜான்சன் விமான நிலையத்திற்கு வாக்குச்சீட்டை அனுப்புவார். விண்வெளி வீரர்களுக்கு இது அனுப்பபட்டால் அவர்களால் இதில் வாக்குச்செலுத்தி திரும்பவும் இங்கு அனுப்ப முடியுமா என்பதை விண்வெளி நிலையத்தில் இருக்கும் கணிணி மூலம் பார்த்து தெரிந்துக் கொள்வர்.

ஒரு வெற்றிகரமான சோதனை முயற்சிக்குப் பின் , ஹாரிஸ் மாவட்டத்தின் கிளார்க்கின் அலுவலகம் மற்றும் டெக்சாஸைச் சுற்றியுள்ள மாவட்டங்களால் உருவாக்கப்பட்ட ஒரு பாதுகாப்பான மின்னணு வாக்குச்சீட்டு  ஜான்சன் விண்வெளி மையத்திற்கு அனுப்பபடும்.

அங்கிருந்து வாக்களிக்கும் உறுப்பினர்களிடம் தரை-விண்கல குறிகை இணைப்பு (uplinking) மூலம் வாக்குச் சீட்டு அனுப்பபடுகிறது. மேலும் விண்வெளி வீரரின்  சான்றுகளுடன் ஒரு இ-மெயில், மாவட்ட கிளார்க்கிடமிருந்து விண்வெளி வீரருக்கு அனுப்பப்படுகிறது. அவர் கொடுத்தச் சான்றுகளை தெரிவித்து மின்னனு வாக்குச்சீட்டில் வாக்குச் செலுத்தலாம்.

விண்வெளி வீரர்கள் வாக்குச் செலுத்திய பின், மின்னணு வாக்குச்சீட்டு பாதுகாப்பாக ஜான்சன் விண்வெளி மையத்திற்கு, தரை-விண்கல குறிகை இணைப்பு மூலம் திரும்ப பெறப்படுகிறது. பின்பு பெறப்பட்ட மின்னனு வாக்குச்சீட்டு இ-மெயில் மூலம் மாவட்ட கிளார்க்கிடம் திரும்ப அனுப்படுகிறது. இதன் மூலம் விண்வெளி வீரர்களின் வாக்கு பதிவு செய்யப்படுகிறது.

2024-ல் நிலவு மற்றும் செவ்வாய்க்கு விண்வெளி வீரர்களை அனுப்ப திட்டமிட்டுக் கொண்டிருக்கும் நாசா, வாக்குச் செலுத்த விரும்பும் விண்வெளி வீரர்கள் எங்கிருந்தாலும் அவர்கள் வாக்குச் செலுத்துவதை உறுதி செய்யும் என அறிவித்துள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்