Aran Sei

வாழ்வதற்கான ஓசோன்: சர்வதேச ஓசோன் தினம்

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 16 ஆம் தேதி உலக ஓசோன் தினம் அனுசரிக்கப்படுகிறது. ஓசோன் அடுக்கு குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் அதைப் பாதுகாப்பதற்கு சாத்தியமான தீர்வுகளைக் கண்டறிவதற்கும் இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.

ஓசோன் மண்டலம் அல்லது ஓசோன் கவசம் என்பது பூமியின் அடுக்கு மண்டலத்தின் ஒரு பகுதியாகும். வளிமண்டலத்தின் பிற பகுதிகளுடன் ஒப்பிடும்போது இந்த பகுதியில் ஓசோனின் (O3) குவிப்பு மிக அதிகமாக இருக்கும். இருப்பினும், அடுக்கு மண்டலத்தில் உள்ள மற்ற வாயுக்களுடன் ஒப்பிடும்போது இதன் அளவு சிறியது.

சூரியனிலிருந்து வெளியாகும் புற ஊதா கதிரின் பெரும்பகுதியை (சுமார் 97-99%) ஓசோன் மண்டலம் உறிந்துகொள்கிறது. ஓசோன் இல்லாவிட்டால் பூமியின் மேற்பரப்பில் வாழும் உயிரினங்கள் புற ஊதா கதிருடன் தொடர்புக்கு வரும்போது பாதிக்கப்படும். ஆகையால், ஓசோன் மண்டலம் இல்லாத வாழ்க்கை சாத்தியமில்லை.

ஓசோனின் முக்கியத்துவம் என்ன?

ஓசோன் மண்டலம், 10 லட்சம் ஓசோன் வாயுவில் 10-க்கும் குறைவான பகுதிகளைக் தான் கொண்டுள்ளது. அதே சமயம், பூமியின் வளிமண்டலத்தில் ஒட்டுமொத்த ஓசோன் குவிப்பு 10 லட்சத்தில் 0.3 பாகங்கள் ஆகும். இவ்வழியில், இது சூரியனிலிருந்து வெளியாகி தீங்கு விளைவிக்கும் புற ஊதா ஒளி கதிர்களில் சுமார் 97-99% ஐ உறிஞ்சிவிடுகிறது.

அடுக்கு மண்டலத்தின் கீழ் பகுதியில் காணப்படும் ஓசோன் மண்டலம், பூமிக்கு மேல் சுமார் 15 முதல் 35 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. அதன் அடர்த்தி பருவகால மாற்றத்திற்கு ஏற்பவும் புவியியல் ரீதிக்கு ஏற்பவும் மாறும்.

ஓசோன் அடுக்கு குறைந்து, புற ஊதா கதிர்கள் அதிகரித்ததால் தோல் புற்று நோய் மற்றும் பல சுற்றுசூழல் பிரச்சினைகள் ஏற்பட்டன. இதனை அடுத்து, பல வேதி பொருட்களை தடை செய்ததால் இப்போது ஓசோனில் ஏற்பட்ட பாதிப்பு குறைந்துள்ளது. எனவே, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக் குழு செப்டம்பர் 16-ஐ ஓசோன் அடுக்கைப் பாதுகாப்பதற்கான சர்வதேச தினமாக அறிவித்தது.

உலக ஓசோன் தின அறிவிப்பு

1994-ம் ஆண்டு, டிசம்பர் 19, ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை (யு.என்.ஜி.ஏ) செப்டம்பர் 16-ஐ ஓசோன் அடுக்கைப் பாதுகாப்பதற்கான சர்வதேச தினமாக அறிவித்தது.1987-ம் ஆண்டு, அதே நாளில், ஓசோன் மண்டலத்தை பாதிக்கும் வேதி பொருட்களின் உற்பத்தியை தடை செய்யும் மாண்ட்ரீல் நெறிமுறையில் கையெழுத்திட்ட 45 நாடுகளை நினைவுகூரும் வகையில் இந்த தினம் தேர்ந்தெடுக்கப்பட்டது.

இந்த சர்வதேச ஒப்பந்தத்தின் விளைவாக, அண்டார்டிகாவில் உள்ள ஓசோன் துளை மெதுவாக குறைந்து வருகிறது.

‘வாழ்க்கைக்கான ஓசோன்’

‘ஓசோன் ஃபார் லைஃப் (வாழ்க்கைக்கான ஓசோன்)’ என்பது 2020-ம் ஆண்டின் உலக ஓசோன் தினத்திற்கான முழக்கம். இது உலகளாவிய ஓசோன் அடுக்கு பாதுகாப்பின் 35 ஆவது ஆண்டு கொண்டாட்டமாகும். இம்முழக்கம் ஓசோன் மண்டலத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துவதாக உள்ளது. இந்த உலகத்தில் உயிரினங்கள் வாழ்வதற்கும், வருங்கால சந்ததியினரை பாதுகாப்பதற்கும் நாம் ஓசோன் மண்டலத்தை பாதுகாக்க வேண்டும்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்