கோவை உள்ள தனியார் பள்ளி ஆசிரியரின் பாலியல் துன்புறுத்தலால் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
ஆர்.எஸ்.புரத்தில் உள்ள சின்மயா வித்யாலயா பள்ளியில் இயற்பியல் ஆசிரியரின் தொடர் பாலியல் துன்புறுத்தல் காரணமாக மேல்நிலை வகுப்பு படிக்கும் மாணவி தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்துள்ளார்.
இது குறித்து கோவையைச் சேர்ந்த புரட்சிகர இளைஞர் கழகத்தின் மாவட்ட செயலாளர் பெரோஸ் பாபு அரண்செய் யிடம் பேசியபோது, “சின்மயா வித்யாலயா பள்ளிக்கு மேல்நிலை வகுப்பு நடத்துவதற்கான தர சான்றிதழ் இல்லை என்று மாணவர்கள் தெரிவித்தனர். அப்பள்ளியில் இயற்பியல் ஆசிரியராக பணியாற்றி வருபவர் மிதுன் சர்க்கரவர்த்தி. அதேபளியில் +2 வகுப்பு படிக்கும் மாணவிக்குத் தொடர் பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார் . இதைப் பள்ளி நிர்வாகத்திடம் மாணவி முறையிட்டபோது ‘பேருந்தில் போனால் உரசத்தானே செய்வாங்க. அதுபோல் நினைத்துக்கொள்’ என்று பள்ளி நிர்வாகம் கூறியுள்ளது. மேலும் குற்றஞ்சாட்டப்பட்ட ஆசிரியரின் மனையியிடமும் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. அதனைத் தொடர்ந்து பள்ளி நிர்வாகம் மாணவியை கவுன்சிலிங் செய்துள்ளது. ஆசிரியரின் அத்துமீறல் அதிகமானதால் வேறு பள்ளிக்குப் இடம் மாறியுள்ளார்” என்று தெரிவித்தார்.
‘முல்லைப் பெரியாறு அணை குறித்து கருத்துக் கூற பாரதிய ஜனதாவுக்கு தகுதி கிடையாது’ – வைகோ
மேலும், ”பள்ளியில் இருந்து மாறுதலாகி சென்ற மாணவியை வாட்சாப்பில் தொடர்புகொண்டு தொந்தரவு செய்துள்ளார். இதை பொறுக்க முடியாத மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்துள்ளார். உடலை வாங்க மறுத்து பெற்றோர்களும் பொது மக்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் குற்றஞ்சாட்டப்பட்ட இயற்பியல் ஆசிரியர் மிதுன் சர்க்கரவர்த்தியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்” என்று கூறினார்.
”மாணவியின் குடும்பத்திற்கு நிவாரணம் வேண்டியும் பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காவல்துறை கண்காணிப்பாளர் சம்பவ இடத்திற்கு வந்துள்ளார். விசாரணை நடத்தி பள்ளிமீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்” என்று புரட்சிகர இளைஞர் கழகத்தின் மாவட்ட செயலாளர் பெரோஸ் பாபு அரண்செய்யிடம் தெரிவித்தார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.