Aran Sei

ஆன்லைன் வகுப்பிற்கு ஆண்ட்ராய்டு தொலைபேசி இல்லை: தற்கொலை செய்துக்கொண்ட பள்ளி மாணவி

காராஷ்டிர மாநிலம் நாசிக்கில் ஆன்லைன் வகுப்பிற்கு ஆண்ட்ராய்டு தொலைபேசி இல்லாததால், 17 வயது கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

ஜனவரி 23ஆம் தேதி பிற்பகல், பாரதி துக்காராம் சௌதாரி என்ற மாணவி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டதாகவும், அப்போது அப்பெண்ணின் பெற்றோர் விவசாய வேலைக்குச் சென்றிருந்ததாகவும் காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

“பாரதி ஆலங்குன்றில் உள்ள ஆசிரமப் பள்ளிக் கல்லூரியில் 11ஆம் வகுப்பு அறிவியல் பிரிவில் படித்து வந்தார். குடும்பம் ஏழ்மையில் இருந்ததால், ஆன்லைன் வகுப்பிற்காக அவருக்கு ஆண்ட்ராய்டு தொலைபேசியை வாங்க முடியவில்லை என்று அப்பெண்ணின் பெற்றோர் கூறினர். ஆனாலும், ஒரு தொலைபேசியைக் கடன் வாங்கி உபயோகித்து வந்தாள், அந்த பகுதியில் உள்ள மோசமான இணையவசதி அவளை விரக்தியடையச் செய்திருக்கிறது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

நாடெங்கும் உள்ள 22% பள்ளிகளில் மட்டுமே இணையவசதி உள்ளது – ஆன்லைன் வகுப்புகளின் நிலை என்ன?

இத்தற்கொலை விபத்து மரணம் என வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அக்காவல்துறை அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

Source: PTI

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்