Aran Sei

போக்சோ சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டுமா? – ஆராயும் உச்சநீதிமன்றம்

credits : pti

தினெட்டு வயதுக்கு கீழுள்ள சிறார்கள் உடன்பாட்டோடு பாலுறவு கொண்டால் அதற்குச் சிறார்மீதான பாலியல்வன்கொடுமைக்கு எதிரான பாதுகாப்பு சட்டத்தின் (POCSO) கீழ் தண்டனை வழங்க முடியுமா என்பது குறித்து உச்சநீதிமன்றம் ஆராய்ந்துவருவதாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் பாலியல் வன்கொடுமை வழக்குகள் – குற்றவாளியையே திருமணம் செய்ய நிர்ப்பந்திக்கும் நீதிமுறை

தமிழ்நாட்டை சார்ந்த 18 வயது ஆணும் 17 வயது சிறுமியும் காதலித்தபோது இருவரும் உடன்பட்டு பாலுறவு கொண்டதாகவும், இந்நிலையில் அந்தச் சிறுமியைக் குற்றம்சாட்டப்பட்டவர் திருமணம் செய்ய மறுக்கவே அந்தச் சிறுமிமீது பாலியல்வன்கொடுமையில் ஈடுபட்டாரென அவர்மீது கடந்த 2015 ஆம் ஆண்டு வழக்கு பதியப்பட்டதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த 2019 அன்று கீழமை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த அந்தச் சிறுமி, இருவரும் உடன்பட்டே பாலுறவு கொண்டோம் எனத் தெரிவித்த பின்னும் குற்றம் சட்டப்பட்டவருக்கு போக்ஸோ சட்டத்தின் கீழ் 10 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தி வயர் செய்தி கூறுகிறது.

‘போக்சோ’ வழக்கில் சர்ச்சைக்குரிய தீர்ப்பு வழங்கிய நீதிபதி – பதவிக்காலத்தைக் குறைத்து உச்ச நீதிமன்றம் நடவடிக்கை

சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட அந்த மனு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றும் அதே சமயம் இந்த மனுவை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உத்தரவிட்டதாகவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டவர்களுக்கு ஆயுள் தண்டனை – பீகார் நீதிமன்றம் உத்தரவு

இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்டவரின் மேல்முறையீட்டு மனுவில் குற்றம் சாட்டப்பட்டவரின் வழக்கறிஞர் எழுப்பிய கேள்விக்கு உச்சநீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜீ  சிறார்கள் உடன்பாட்டோடு பாலுறவு கொண்டால்  போக்ஸோ சட்டத்தின் கீழ் தண்டனை வழங்க முடியுமா  குறித்து ஆராய்ந்து வருவதாக தெரிவித்துள்ளாரென தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது எனத் தமிழக காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அந்த செய்தி கூறுகிறது.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்