லக்கிம்பூர் வன்முறை சம்பவத்தை உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரணை செய்ய உள்ளது.
அக்டோபர் 3 ஆம் தேதி, உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூரில் வேளாண் சட்டங்களை நீக்கக்கோரி விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அப்போது, ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலையை முடக்கி அவருக்கு எதிராக கறுப்புக் கொடி காட்டினர்.
அப்போது, அஜய் மிஸ்ராவுக்கு சொந்தமான ஒரு கார் உட்பட மூன்று கார்கள், போராடிய விவசாயிகள் மீது மோதியதில் நான்கு விவசாயிகள் உயிரிழந்தனர். அதைத்தொடந்து, நடந்த வன்முறையில் நான்கு பேர் உயிரிழந்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக ஒன்றிய உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா உள்பட 14 பேர் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அஜய் மிஸ்ரா மகன் ஆஷிஷ் மிஸ்ரா மகன் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனால் இதுவரை கைது செய்யப்படவில்லை.
நேற்று(அக்டோபர் 6), உச்ச நீதிமன்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்ட வழக்கு பட்டியலின் படி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா, நீதிபதிகள் சூர்யா காந்த் மற்றும் ஹிமா கோஹ்லி ஆகியோர் அடங்கியோர் அடங்கிய அமர்வு இவ்வழக்கை இன்று(அக்டோபர் 7) விசாரிக்க உள்ளது.
‘உயிர்களை பறித்த லக்கிம்பூர் கேரி வன்முறை’ என்ற தலைப்பில் இந்த வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது.
நேற்று முன்தினம்(அக்டோபர் 5), இச்சம்பவம் குறித்து உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் சிபிஐயின் உயர்மட்ட நீதி விசாரணை கோரி இரண்டு வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணாவுக்கு கடிதம் எழுதியிருந்தனர்.
அக்கடிதத்தில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி இச்சம்பவத்தை பொது நல வழக்காக கருத வேண்டும் என்று கோரியிருந்தனர்.
Source: PTI
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.