Aran Sei

விவசாயிகள் போராட்டத்தில் நடந்த வன்முறை தொடர்பான ட்விட் – சசி தரூர் கைதுக்கு தடை விதித்த உச்ச நீதிமன்றம்

credits : the indian express

டிராக்டர் பேரணியின்போது ஏற்பட்ட வன்முறை தொடர்பாக ‘தவறாக’ ட்விட் செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் சசி தரூர் மற்றும் ராஜ்தீப் சர்தேசாயை கைது செய்வதற்கு  உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று விவசாயச் சட்டங்களையும் திரும்பப் பெற கோரி விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தின் ஒரு பகுதியாக, நடைபெற்ற குடியரசு தின டிராக்டர் பேரணியின்போது நவ்னீத் சிங் என்ற விவசாயி டிராக்டர் கவிழ்ந்து உயிரிழந்தார். அவர் காவல்துறையால் சுடப்பட்டார் என்று சில விவசாயிகள் குற்றம் சாட்டினர்.

இதைத் தொடர்ந்து, குடியரசு தின பேரணியில் பங்கேற்ற விவசாயி காவல்துறையின் துப்பாக்கிச்சூட்டில்  உயிரிழந்ததாக இந்தியா டுடேவின் ஆலோசனை ஆசிரியர் ராஜ்தீப் சர்தேசாய் உட்பட பல பத்திரிகையாளர்கள் ட்வீட் செய்திருந்தனர். ஆனால், அந்த விவசாயி ஒரு விபத்தில் உயிரிழந்ததாகக் கூறும் வீடியோவைக் காவல்துறை வெளியிட்டது.

டிராக்டர் பேரணி வன்முறை – காணாமல் போனவர்களை காவல் நிலையங்களில் தேடும் விவசாயிகள்

அந்த வீடியோ வெளியான பிறகு ராஜ்தீப் சர்தேசாய் தனது தவறை திருத்திக் கொண்டு போலீஸ் வீடியோவை ட்வீட் செய்திருந்தார். அதே நாளில் தொலைக்காட்சி ஒளிபரப்பிலும் அவர் காவல்துறையின் வீடியோவை உறுதி செய்திருந்தார்.

 

குடியரசு தின டிராக்டர் பேரணி வன்முறை – நடிகர் தீப் சித்துவை கைது செய்த டெல்லி காவல்துறை

இதையடுத்து பொய் செய்தியைப் பரப்பியதாகக் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர், பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாய், பத்திரிகையாளர் மிரினால் பாண்டே, பத்திரிகையாளர் பரேஷ் நாத், நேஷனல் ஹெரால்ட் பத்திரிகையின்  தலைமை ஆசிரியர் ஜஃபர் ஆகா, காரவன் பத்திரிகையின் ஆசிரியர் ஆனந்த் நாத்  ஆகியோர் மீது தேசதுரோகம் உட்பட இந்திய தண்டனை சட்டத்தின் பல்வேறு பிரிவுகளிலும் (153A, 153B, 295A, 298, 504, 506, 505(2), 34, 120-B),  தகவல் தொழில் நுட்பச் சட்டத்தின்  பிரிவு 66-ன் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இவர்கள்மீது ஐந்து மாநிலங்களில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.

 

டிராக்டர் பேரணி Vs ரத யாத்திரை: விவசாயிகளை விமர்சிக்க பாஜகவுக்கு உரிமை உள்ளதா?

இந்த வழக்குகளில் தங்களை கைது செய்யக் கூடாது எனக் கோரி சசி தரூரும், ராஜ்தீப் சர்தேசாயும் கடந்த வாரம் உச்ச நீதிமன்றத்தை நாடியிருந்ததனர். இந்நிலையில், இன்றைய தினம், உச்ச நீதிமன்றம் இவர்களை கைது செய்வதற்கு தடை வித்தித்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

 

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்