Aran Sei

‘பாலின சமத்துவமின்மையை அனுமதிப்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானது’ – தேசிய பாதுகாப்பு தேர்வில் பெண்களை அனுமதிக்காதது குறித்து உச்சநீதி மன்றம் கருத்து

தேசிய பாதுகாப்பு  பயிற்சியக (National Defence Academy) நுழைவு தேர்விற்கு பெண்கள் சேர பாலின அடிப்படையில் தடை செய்திருப்பது பெண்களின் அடிப்படை உரிமைக்கு எதிரானது என்று உச்சநீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.

தேசிய பாதுகாப்பு பயிற்சியகம் ராணுவ அதிகாரிகளாக சேர்வதற்கான பயிற்சி மையம் ஆகும்.

மாதவிடாய் காலத்தில் பெண்கள் ஒதுக்கப்படுவது தடுக்கப்பட வேண்டும் – குஜராத் உயர்நீதி மன்றம் உத்தரவு

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட மனுவிற்கு பதிலளித்த உச்சநீதிமன்றம், தகுதி வாய்ந்த பெண்களைப் பாலின அடிப்படையில் தேசிய பாதுகாப்பு பயிற்சியகம் மற்றும் கடற்படை பயிற்சியகத்தில் சேர அனுமதியளிக்காதது சமத்துவத்திற்கு எதிரானது என்று  தெரிவித்ததாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த மனுவில் 12 ஆம் வகுப்பு முடித்த தகுதி வாய்ந்த ஆண்களுக்குத் தேசிய பாதுகாப்பு பயிற்சியகத்திதில் சேருவதற்கான நுழைவு தேர்விற்கு அனுமதிக்கப்படுவதாகவும், ஆனால் தகுதி வாய்ந்த பெண்களுக்கு, பெண் என்பதாலே அனுமதி அளிக்கப்படுவதில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதாக அந்தச் செய்தி தெரிவிக்கின்றது.

“நாங்கள் பெண்கள் மீது நன்மதிப்பு வைத்திருக்கிறோம்” – உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து

உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வின் முன் அம்மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதி “மத்திய பணியாளர் தேர்வு ஆணையம் பாலின அடிப்படையில் பெண்களுக்கு விலக்கு அளித்திருப்பது சட்டத்திற்கு புறம்பானது” என்று கூறியுள்ளதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த மனுவின் விசாரணையில், பாலின அடிப்பபடையில் தகுதி வாய்ந்த பெண்களைத் தேர்வுக்கு அனுமதி அளிக்காதிருப்பதும், பாலின சமத்துவமின்மையை ஊக்குவிப்பதும் இந்திய அரசியல் சாசனப்படி ஏற்றுக்கொள்ளவே இயலாது என்று உச்சநீதி மன்ற அமர்வு தெரிவித்துள்ளதாகவும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்