Aran Sei

‘அரசிற்கு எதிரான மாற்றுக்கருத்து தேசதுரோகம் ஆகாது’ – உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

ரசின் கருத்திற்கு எதிராக மாற்றுக்கருத்தை வைப்பது தேசதுரோக குற்றச்சாட்டின் கீழ் வராது என்று தீர்ப்பளித்து, ஒருங்கிணைந்த காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லாவுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.

இன்று (மார்ச் 3), உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், ஹேமந்த் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு, அரசின் கருத்துகளுக்கு எதிராக மாற்றுக் கருத்துக்களை வெளிப்படுத்துவது தேசதுரோகமாகாது என்று தீர்ப்பளித்துள்ளதாக பார் & பெஞ்ச்  செய்தி வெளியிட்டுள்ளது.

370-வது பிரிவின் கீழ் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை நீக்கியதற்காக, மத்திய அரசின் நடவடிக்கையை  விமர்சித்து கருத்து கூறிய தேசிய மாநாட்டு கட்சியின் தலைவரும் ஸ்ரீநகர் நாடாளுமன்ற உறுப்பினருமான ஃபரூக் அப்துல்லாவுக்கு எதிராக ராஜத் சர்மா மற்றும் ஸ்ரீவஸ்தவா ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

காஷ்மீர் : உரிமையை மீட்க ஒன்றுகூடும் கட்சிகள்

2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்த்து நீக்கப்பட்டதில் இருந்து, ஃபரூக் அப்துல்லா, ஸ்ரீநகர் குப்கர் சாலையில் உள்ள அவரது வீட்டில் காவலில் வைக்கப்பட்டிருந்தார். தொடக்கத்தில் 12 நாள் வீட்டு காவல் என்று அறிவித்த மாநில நிர்வாகம், அதை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டித்து டிசம்பர் 15-ம் தேதி வரை வீட்டுக் காவல் தொடரும் என்று அறிவித்தது.

இரண்டாவது முறையாக, மார்ச் 15 வரை காவல் நீட்டித்தது. தடுப்புக்காவல் நீட்டிக்கப்படக்கூடிய அதிகபட்ச காலம் இரண்டு ஆண்டுகள் மட்டுமே என்பதால், ஃபரூக் அப்துல்லா சென்ற ஆண்டு மார்ச் 13-ம் தேதி விடுவிக்கப்பட்டார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்