Aran Sei

ஆவணங்களின் அடிப்படையிலேயே கேள்வி கேட்கப்பட்டது – சர்ச்சைக்குரிய கேள்விக்கு உச்சநீதிமன்றம் விளக்கம்

பாலியல் வன்கொடுமை வழக்கில், “பாதிக்கப்பட்ட சிறுமியை திருமணம் செய்து கொள்வீர்களா?” என குற்றம்சாட்டப்பட்டவரிடம் உச்சநீதிமன்றம் எழுப்பிய சர்ச்சைக்குரிய கேள்வி, ஆவணங்களின் அடிப்படையிலேயே கேட்கப்பட்டது என, உச்சநீதிமன்றம் தெளிவுப்படுத்தி உள்ளது.

பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர், மும்பை உயர்நீதிமன்ற ஔரங்கபாத் கிளையில் கோரிய முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.எ.பாப்டே இந்த சர்ச்சைக்குரிய கேள்வியை எழுப்பியிருந்தார்.

பாலியல் வன்கொடுமை புகார் கூறியவரை திருமணம் செய்யக் கூறிய விவகாரம் – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பதவி விலகக் கோரிக்கை

இதுகுறித்து, தலைமை நீதிபதி எஸ்.எ.பாப்டேவிற்கு கடிதம் எழுதியுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பிரோ உறுப்பினர் பிருந்தா காரத், நீதிமன்றங்கள் இது போன்ற பிற்போக்கானக்கான கருத்துகளை கூறுவதை நிறுத்திக்கொள்ளவேண்டும் எனவும், இந்த சர்ச்சைக்குரிய கருத்திற்கு உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள உச்சநீதி மன்றம், அந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் தான் அவ்வாறு கேள்வி கேட்கப்பட்டது என்றும் கூறியுள்ளது.

உ.பியில் கொல்லப்பட்ட தலித் சிறுமி – பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகவில்லை என காவல்துறை தகவல்

பாதிக்கப்பட்ட பெண்ணைக் கூட்டிக்கொண்டு அவரது தாய் புகாரளிக்க காவல் நிலையம் சென்ற போது, குற்றம்சாட்டப்பட்டவரின் தாய், “தவறை நான் ஒப்புகொள்கிறேன் உனது மகளையே நான் மருமகளாக ஏற்றுகொள்கிறேன்” என்றதாகவும், பெண்ணின் தாய் அதை ஏற்றுக்கொண்டார் எனவும், பாதிக்கப்பட்ட பெண் பதினெட்டு வயதை அடைந்ததும், திருமணம் செய்து வைக்கலாம் என்று முடிவுசெய்திருந்தார்கள் என்றும் குற்றம்சாட்டப்பட்டவரின் ஜாமீன் மனுவில் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த 2018, ஜூன் 2 ஆம் தேதி, அந்தப் பெண்ணிற்கு பதினெட்டு வயது பூர்த்தியடைந்த நிலையில், குற்றம்சாட்டப்பட்டவரின் தாய் பெண் கேட்க சென்றபோது, பெண்ணின் தாய் மறுத்துவிட்டதாகவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது என்று உச்சநீதிமன்ற அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்

 

இந்தியாவில் பாலியல் வன்கொடுமை வழக்குகள் – குற்றவாளியையே திருமணம் செய்ய நிர்ப்பந்திக்கும் நீதிமுறை

இதன் அடிப்படையில், குற்றம்சாட்டப்பட்டவரின் முன்ஜாமீன் மனு விசாரணையின் போது , “நீங்கள் பாதிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்து கொள்வீர்களா? திருமணம் செய்து கொண்டால் அதை ஒரு பொருட்டாக எடுத்துகொள்வோம். இல்லையென்றால் நீங்கள் சிறைக்கு போகவேண்டி சூழல் ஏற்படும். திருமணம் செய்துகொள்ள உங்களை வற்புறுத்தவும் இல்லை” என, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.எ.பாப்டே தலைமையிலான மூவர் அமர்வு கேள்வி கேட்டிருந்தது என்று நீதிமன்ற அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவரும், பாதிக்கப்பட்ட பெண்ணும் உறவினர்கள் என்றும், குற்றம்சாட்டப்பட்டவரின் மனுவில் உள்ளதையே அவரது முன்ஜாமீன் மனு விசாரணையின்போது நீதிபதிகள் குறிப்பிட்டனர் என்றும். நீதிமன்ற அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

Source: PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்