Aran Sei

பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களை நீதிமன்றங்கள் கவனமாக விசாரிக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் அறிவுரை

ஒரு பெண்ணைப் பாலியல் சீண்டல் (Sexual Harassment) செய்தவர், அதற்குத் தண்டனையாக, அந்தப் பெண்ணுக்கு ராக்கி கட்ட வேண்டும் என உத்தரவிட்ட மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை, உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், மத்திய பிரதேச மாநிலத்தின், உஜ்ஜயின் மாவட்டத்தில், விக்ரம் பாக்ரி எனும் நபர் தன்னுடைய பக்கத்து வீட்டில் இருந்த பெண்ணைப் பாலியல் ரீதியாக சீண்டியுள்ளார். அவர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 452, 354 (ஏ), 354, 323, 506 ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

சிறையில் இரண்டு மாதங்கள் கழித்த நிலையில், அவர் ஜாமீன் கோரி மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி ரோகித் ஆர்யா தலைமையிலான அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தது.

ஆயுர்வேதா படிப்பில் அறுவை சிகிச்சை: இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, விக்ரம் பாக்ரிக்கு சில நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கினார். முதல் நிபந்தனையாக, பாலியல் சீண்டலுக்கு உள்ளான பெண்ணுக்கு ராக்கி கட்டி, அந்தப் பெண்ணைத் தன்னால் இயன்ற அளவுக்கு பாதுகாப்பேன் என உறுதியளிக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

ஒடிடி தளங்களில் ஆபாசமான படங்கள் வெளியாகின்றன – உச்ச நீதிமன்றம் கருத்து

மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ 11,000 வழங்க வேண்டும் எனவும் ( ரக்‌ஷாபந்தன் போது சகோதரர்கள் சகோதரிகளுக்குக் கொடுக்கும் தொகை), அந்தப் பெண்ணினுடைய மகனுக்கு ரூ 5000 வழங்க வேண்டும் எனவும் நிபந்தனை விதித்தனர்.

‘அரசிற்கு எதிரான மாற்றுக்கருத்து தேசதுரோகம் ஆகாது’ – உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, 9 பெண் வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு தொடர்பாக ஆஜரான வழக்கறிஞர் சஞ்சய் பரிக், இந்த உத்தரவென்பது ( ராக்கி கட்டுவது) பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான பெண்ணை மேலும் காயப்படுத்தும் என தெரிவித்துள்ளார்.

கணவன் எவ்வளவு கொடூரமாக இருந்தாலும் சரி பாலியல் வன்புணர்வு செய்தார் என கூறலாமா ? : உச்ச நீதிமன்றம்

மேலும், பாலியல் சீண்டல் போன்ற சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் பாதிக்கப்பட்டவரின் அருகில் கூட அனுமதிக்கப்படமாட்டார்கள். ஆனால் உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் படி, குற்றவாளி பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டுக்கே (சம்பவம் நடந்த இடம்) அனுமதிக்கப்படுகிறார் என்று நீதிமன்றத்தில் கூறியுள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

சித்திக் காப்பானுக்கு மனிதாபிமான அடிப்படையில் ஐந்து நாட்கள் ஜாமீன்: உச்ச நீதிமன்றம்

மேலும், இது போன்ற தீர்ப்புகள் பெண்களை குற்றவாளிகளாக சித்தரிப்பதை மேலும், அதிகரிக்கும் என்றும் வழக்கறிஞர் பரிக் தெரிவித்துள்ளார்.

சாதி மற்றும் மத மறுப்பு திருமணங்கள் வழியே தான் சாதி ஒழியும்: படித்த இளைஞர்கள் சமூக மாற்றத்தை முன்னெடுக்கிறார்கள் – உச்ச நீதிமன்றம்

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் தலைமையிலான அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

‘போக்சோ’ வழக்கில் சர்ச்சைக்குரிய தீர்ப்பு வழங்கிய நீதிபதி – பதவிக்காலத்தைக் குறைத்து உச்ச நீதிமன்றம் நடவடிக்கை

மேலும் பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களை விசாரிக்கும் நீதித்துறை நன்றாக சிந்தித்து கவனத்துடன் கையாள, சில வழிகாட்டுதல்களையும் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்