Aran Sei

நீதிமன்ற உரையாடல்களை ஊடகங்கள் வெளியிடத் தடை கோரிய தேர்தல் ஆணையம் – பேச்சு சுதந்திரத்திற்கு எதிரானது என உச்சநீதிமன்றம் மறுப்பு

நீதிமன்றத்தில் வழக்கு தொடர்பாக நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களுக்கு இடையிலான உரையாடலை வெளியிட ஊடகங்களுக்குத் தடை விதிப்பது, பேச்சுரிமைக்கு எதிரானது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளதாக தி இந்து  செய்தி வெளியிட்டுள்ளது.

நீதிமன்ற உரையாடல்களை வெளியிட ஊடகங்களுக்குத் தடை விதிக்க முடியாது என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவ எதிர்த்துத் தேர்தல் ஆணையம் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டை உச்சநீதிமன்ற நீதிபதி டி.ஒய். சந்திரசூட் அடங்கிய அமர்வு நிராகரித்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவலுக்கு தேர்தல் ஆணையமே காரணம் எனக் குற்றம்சாட்டிய சென்னை உயர்நீதிமன்றம், தமிழக சட்டமன்ற தேர்தலின்போது பேரணிகள் மற்றும் பிரச்சாரப் பொதுக்கூட்டங்களுக்கு அனுமளியத்ததற்காக தேர்தல் ஆணைய அதிகாரிகள்மீது கொலை வழக்கே பதியலாம் எனத் தெரிவித்திருந்தனர்.

‘தமிழ் மக்களின் உயிர்கள் முக்கியமில்லையா’ – ஆக்சிஜன் ஒதுக்கீட்டில் தமிழகத்திற்கு அநீதி இழைக்கப்பட்டதாக சு.வெங்கடேசன் குற்றச்சாட்டு

நீதிமன்ற உரையாடல்களை ஊடகங்கள் வெளியிடத் தடைவிதிக்கவோ, தேர்தல் ஆணையத்தின் மீது வைத்த குற்றச்சாட்டைத் திரும்பப் பெறவோ சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டார். இதைத் தொடர்ந்து, இந்திய தலைமை தேர்தல் ஆணையர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.

அதில், தேர்தல் ஆணைய அதிகாரிகள்மீது கொலை வழக்குகள் பதியப்படலாம் என்கிற உயர்நீதிமன்றத்தின் கருத்தை உச்சநீதிமன்றத்தில் முறையிட்டதாக தி இந்து தெரிவித்துள்ளது.

‘உத்தர பிரதேசத்தில் மனிதனாக இருப்பதை விட மாடாக இருப்பதே மேல்’ – சஷி தரூர்

”இந்த வழக்கு இந்திய அரசியலமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகளான உயர்நீதிமன்றம், தேர்தல் ஆணையம் இரண்டிற்குமான ஒரு நுட்பமான சமநிலையை ஏற்படுத்தியுள்ளது. நீதித்துறை நடவடிக்கைகளை நேர்மையாகவும் நியாயமாகவும் உண்மையான நேரத்தில் மக்களுக்குத் தெரிவிக்கும் ஊடகங்களின் அதிகாரத்தையும் இந்த வழக்கு முக்கியமாகக் கொண்டுள்ளது.” என நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உயர்நீதிமன்றத்தின் கருத்து கடுமையானதுதான் எனத் தெரிவித்துள்ள நீதிபதிகள், நீதிமன்றத்தின் தீர்ப்பில் உள்ள மொழி, அரசியலமைப்பு விழுமியங்களை உணரக்கூடியதாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

Source : The Hindu

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்