Aran Sei

’யாத்திரையில் பெரிய வேல் – ஆயுத சட்டப்படி குற்றம்’- உயர் நீதிமன்றம்

வேல் யாத்திரைக்கு அனுமதி அளிக்காத நிலையில் , அதைஎப்படி நடத்த முடியும் என்று பாஜவுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், பாரபட்சமில்லாமல் அனைத்துக் கட்சி மற்றும் மத நிகழ்ச்சிகளுக்கும் கொரோனா விதிகளை அமல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

பாஜக நடத்தும் வேல் யாத்திரையைத் தடுக்கக் கூடாது என்று தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி, தமிழக பாஜகவின் மாநில பொதுச்செயலாளர் நாகராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

கோயில் இல்லாத பகுதியில் யாத்திரை செல்வது ஏன்? – உயர்நீதி மன்றம் கேள்வி

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், யாத்திரையில் எத்தனைப் பேர் பங்கேற்பர், எத்தனை வாகனங்கள் கலந்து கொள்ளும் போன்ற விவரங்களுடன் காவல் துறைக்கு விண்ணப்பம் அளிக்க பாஜக தரப்புக்கு அறிவுறுத்தியது.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அமர்வில் நேற்று (நவம்பர் 10) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக டிஜிபி தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

`உள்ளே கர்ப்பிணிப் பெண்; உயிரைக் காப்பாற்றுங்கள்’ – வேல் யாத்திரையால் சிக்கிய ஆம்புலன்ஸ்

அப்போது, கடந்த 6, 8 மற்றும் 9ம் தேதிகளில் பாஜக-வினர் திருத்தணி, திருவொற்றியூர், காஞ்சிபுரம், வேலூர் ஆகிய பகுதிகளில் நடந்த யாத்திரையில் கலந்து கொண்டவர்கள், தனி மனித விலகலைப் பின்பற்றவில்லை என்றும் பாஜக தலைவர் முருகன் உட்பட யாரும் முறையாக முக கவசம் அணியவில்லை என்றும் டிஜிபியின் அறிக்கை மேற்கோள் காட்டப்பட்டு தமிழக அரசின் சார்பாக வாதம் முன்வைக்கப்பட்டது.

மேலும், வேல் யாத்திரை காரணமாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, பொதுமக்கள் அவதிக்குள்ளானதாகவும், இந்த யாத்திரையில் பங்கேற்ற கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார்.

தமிழகத்தில் சமய நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயல்கிறது பாஜக – திருமாவளவன் குற்றச்சாட்டு

“இது கோவில் யாத்திரை அல்ல. இது முழுக்க முழுக்க அரசியல் யாத்திரை. மத்தியில் ஆளும் கட்சியான பாஜக பொறுப்புடன் செயல்படாமல், சட்டத்தைப் பின்பற்றாமல் செயல்பட்டுள்ளது. 10 வாகனங்களில் 30 பேர் மட்டுமே செல்வதாகக் கூறிவிட்டு, அதை மீறியுள்ளது.” என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதைத் தொடர்ந்து, பாஜக  தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “கடந்த 9ம் தேதி, நாங்கள் 38 கோவில்களில் 30 பேருடன் 18  வாகங்களில் சென்று  வழிபாடு நடத்த அனுமதியளிக்க கோரி விண்ணப்பித்தோம்.” என்று கூறினார்.

வேல் யாத்திரைக்கு தடை வேண்டும் – சிபிஎம் பாலகிருஷ்ணன்

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “யாத்திரைக்கு அனுமதி அளிக்காத நிலையில்  எப்படி நீங்கள் செல்ல முடியும்? கடந்த மூன்று நாட்களாகக் கட்சி தலைவர்கள் கூடியுள்ளனர். உங்கள் கட்சித் தலைவர் பெரிய வேல் ஒன்றை ஏந்திச் செல்கிறார். இது ஆயுத சட்டப்படி குற்றம்”  என்று கண்டித்தார்.

இதற்கு பதிலளித்த பாஜக தரப்பு வழக்கறிஞர், “அது மரத்தால் செய்யப்பட்ட வேல் தான்” என்றும்  யாத்திரைக்கு அனுமதி கோரும்,  எங்கள் விண்ணப்பத்தை பரிசீலித்து, அமைதியாக  செல்ல அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

வேல் யாத்திரை: ` சட்டத்தை மீறினால் நடவடிக்கை ’ – அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை

இதை அடுத்து  நீதிபதிகள், தேவர் ஜெயந்தி நிகழ்ச்சியைக் குறிப்பிட்டு பேசியுள்ளனர். மேலும்,  அனைவருக்கும் பொதுவாகக் கொரோனா விதிகளை அமல்படுத்த வேண்டும் என்று  தமிழக அரசுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

அதற்கு தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பதிலளித்தார். அதில், ”பாஜக-வினர் அளித்த விண்ணப்பத்தை டிஜிபி பரிசீலித்து, சம்பந்தப்பட்ட மாவட்ட எஸ்பிக்களையும், காவல் ஆணையர்களையும் அணுக அறிவுறுத்தினார்.” என்றும், அதன் அடிப்படையில் தான், ஓசூரில் யாத்திரைக்கு அனுமதி கோரிய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

`பாஜகவின் வரலாறே வன்முறை வரலாறுதான்’ – வேல்முருகன் காட்டம்

இதை ஏற்ற நீதிபதிகள், வேல் யாத்திரையைத் தடுக்க கூடாது என்ற இடைக்கால கோரிக்கை மனுவை முடித்து வைத்துள்ளனர். மேலும், வேல் யாத்திரைக்கு அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடர பாஜக-வுக்கு அனுமதியளித்துள்ளனர்.

மேலும், அனைத்துக் கட்சி கூட்டங்களும் மத கூட்டங்களுக்கும் பாரபட்சமில்லாமல் கொரோனா விதிகளை அமல்படுத்த அதிகாரிகளுக்கு, தமிழக அரசு உத்தரவிட்ட வேண்டும் என்றும், நவம்பர் 16- ஆம் தேதி வரை மத நிகழ்ச்சிகளுக்கு தடை விதித்த அரசாணையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள்  உத்தரவிட்டுள்ளனர். மேலும், இந்த வழக்கு விசாரணையை டிசம்பர் 2 ஆம் தேதிக்குத் தள்ளிவைத்துள்ளனர்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்