Aran Sei

‘புலம்பெயர் தொழிலாளர்கள் பயனடைய ஒரே நாடு, ஒரே ரேஷன்அட்டைத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்’ – மாநிலஅரசுகளுக்கு காலக்கெடுவிதித்த உச்சநீதிமன்றம்

புலம்பெயர் தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் “ஒரே நாடு, ஒரே ரேஷன்அட்டைத்” திட்டத்தை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்த மாநில அரசுகளுக்கு வரும் ஜூன் 31 அன்று வரை கெடுவிதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், ஒன்றியஅரசு புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள்குறித்து அதன் தேசிய இணையதளத்தில் பதிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென உச்சநீதிமன்ற அமர்வு கூறியுள்ளதாகவும் அந்தச் செய்தி கூறுகிறது.

ரேஷன் அட்டை இல்லாத புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உணவு வழங்க என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது- ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

இந்த உத்தரவைப் பிறப்பித்த நீதிபதி அசோக் பூஷன், கொரோனா காலத்தில் யாரும் பசியோடு இல்லாத வகையில் சமூக சமையலறைகள் மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கும் வகையில் வரும் ஜூலை 31 க்குள் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், உணவு அடிப்படை உரிமைகளில் ஒன்று என்பதை நினைவில் வைத்து செயல்படவேடுமென கூறியுள்ளதாகவும் தி இந்து செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புலம்பெயர் தொழிலாளர்களின் உணவுப் பாதுகாப்பிற்கு ஒரே நாடு ஒரே ரேஷன்அட்டை திட்டம் பயனளிக்கும் என ஒன்றிய அரசின் வழக்கறிஞர் தாக்கல் செய்த அறிக்கையை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்