மாற்றுத்திறனாளிகளுக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான விதிமுறைகளை நான்கு மாதங்களுக்குள் வெளியிடுமாறு ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நேற்று (செப்டம்பர் 28), உச்ச நீதிமன்ற நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் தலைமையில் பி.ஆர்.கவாய் மற்றும் சஞ்சீவ் கண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு, மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டம், 2016-ன் பிரிவு 34 -ன் விதியின் படி, நான்கு மாத காலத்தைத் தாண்டாது, அதற்குள்ள விதிமுறைகளை விரைவில் வழங்குமாறு ஒன்றிய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, கடந்த ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி, மாற்றுத்திறனாளிகளுக்கு பதவி உயர்வுகளில் இடஒதுக்கீடு உரிமை உண்டு என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. அத்தீர்ப்பிற்கு விளக்கம் கேட்டு ஒன்றிய அரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்து இந்த உத்தரரை உச்ச நீதிமன்றம் தந்துள்ளது.
அம்மனுவில் காலி பணியிடங்களைக் கணக்கிடுவது குறித்து ஒன்றிய அரசு விளக்கம் கோரியிருந்தது.
இந்த மனுவைத் தள்ளுபடி செய்துள்ள அமர்வு, முந்தைய தீர்ப்பு தெளிவாகதான் உள்ளது என்றும், ஒன்றிய அரசு இந்த இட ஒதுக்கீடு தொடர்பான விதிமுறைகளை வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்துள்ளது.
Source: The Indian Express
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.